கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி..! அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு தகவல்..!

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் கூட்டுறவு துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் ஒருவருட ஆட்சியில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி..! அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு தகவல்..!

மோசடி செய்தவர்களை விசாரணைக்குழு கண்டறிந்த பின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டுறவுத்துறையில், தவறு நடக்காதவாறு வெளிப்படை தன்மையுடன் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’300 யூனிட் வரை இலவச மின்சாரம்’..! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் முதல்வர்..!

Fri Jul 1 , 2022
ஒவ்வொரு மாதமும் வீடுகளுக்கு 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. அங்கு தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பிரபல நடிகரும் ஆம் […]
புதுசா வீடு வாங்கப் போறீங்களா..? மின் இணைப்பு குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

You May Like