“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

உடல் எடையை குறைக்க உதவும் கம்பு…!

உடம்பிற்கு தெம்பு தரும் கம்பு…!

pearl millet bajra cultivation lingsugur raichur karnataka india 1413999

அரிசியை விட கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் தான் கம்பு.
அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது.

kambu 1

மிக்ஸியில் 2 நிமிடம் ஓட்டி, பின் 2 மணி நேரம் ஊர வைத்து , பின் அரிசி போல வேகவைக்கலாம். பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில்கூட வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும் அதன் சுவை.

கம்பு சாப்பிடுவதால் ஏற்படும் 5 பலன்கள்…!

61CjODPJHL

1. அனைத்துச் சத்துக்களுமே உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கு மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துகளுமே இதில் உள்ளதால் அவ்வளவும் நல்லது.

2.கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டும் அல்ல சாதமாக, அவலாக, பொரியாக என எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.
கம்பு ரொட்டி சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது. கம்பில் உள்ள லோ கிளைசெமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச்சத்தினாலும், இதைச் சாப்பிடும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது.

1 2 1

3அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள அமைலோஸ் அமைப்பு நெல் அரிசியைக் காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், ஜீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகும்.
இந்த அமைப்பினால் மெதுவாக மென்று உண்ணுவதால் கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசெமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது.

NINTCHDBPICT000513008510

4.சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்தவரே பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடக்கூடியது என்பதால்,எடைகுறைக்க விரும்புவோர் இதனை பயன்படுத்தலாம்.

diabetes6 thinkstockphotos

5.டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர்களில் சிலர் மூன்று வேளையும் சப்பாத்தியே கதி என்று கிடப்பார்கள். சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாட்களுக்கு புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சப்பாத்திக்கு குட்பை சொல்லி விடலாம். இப்படிப் பல தானியங்களைக் கலந்து எடுத்துக்கொண்டு, கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழ்ந்தால், சர்க்கரைநோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும். உடல் எடையும் குறையும்.

Newsnation_Admin

Next Post

உடலில் வியர்வை வெளியேறுவதால் இவ்வளவு நன்மைகளா???

Fri Oct 11 , 2019
இனி தினமும் கொஞ்சம் நேரம் உடற்பயிற்சி செய்ங்க…! வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு நன்மைகள் நடைபெறும். அதிலும் உடற்பயிற்சி , நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக்க வேண்டும். அப்படி செய்யும் போது நன்றாக வியர்வை வெளியேறும். நச்சுகளை வெளியேற்றும் வியர்வை வியர்வை வெளியேறுவதின் மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேறும். வியர்வை வெளியேறுவதால் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். வியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள […]
health benefits of sweating

You May Like