கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்..

விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகிய சமந்தா..? அந்த குட் நியூஸ் தான் காரணமாமே..!!

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

samantha

சிம்பு, வரலட்சுமி நடிப்பில் வெளியான போடி – போடி படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதனிடையே விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இதுஒருபுறமிருக்க, சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். ஆனால் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

இதனையடுத்து, சிவகார்த்திகேயனை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் விக்னேஷ் சிவன் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் படம் ட்ராப் ஆனதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து கதை எழுத தொடங்கினார்.

vijay sethupathi nayanthara

காதலர் தினத்தன்று இந்த படம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது. காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் ப்ரோமா வீடியோவும் வெளியானது. அதன்படி, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ – ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார்.

kathu vakula rendu kathal

இந்த நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து நடிகை சமந்தா விலகி விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் தற்போதைய சூழலில் தன்னால் நடிக்க இயலாது விக்னேஷ் சிவனிடமே சமந்தா தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1newsnationuser1

Next Post

பிராமணர்களுக்கு தனி டாய்லெட்; இதிலும் ஜாதி பாகுபாடா..?

Fri Mar 6 , 2020
பிராமணர்களின் பயன்பாட்டிற்கான கழிவறை என்று கேரள மாநிலக்கோவில் வைக்கப்பட்டிருந்த பலகையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, அந்தப்பலகை நீக்கப்பட்டது. கேரளாவின் திரிச்சூரில் புகழ்பெற்ற குட்டுமுக்கு மகாதேவ கோயில் அமைந்துள்ளது. அந்த கோவில் வளாகத்தில் 3 கழிவறைகள் உள்ளது. அதில் இரண்டில் வழக்கம் போல் ஆண், பெண் எனவும் ஒன்றில் மட்டும் பிராமணர்களுக்கானது என எழுதப்பட்டிருந்தது. சமீபத்தில் அந்த கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்ற செய்தியாளர் ஒருவர் கோயிலில் பிராமணர்களுக்கு என்று […]
New Project 10

You May Like