சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் 3 வேடங்களில் சந்தானம் நடிக்க இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என ஒரு காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டனர். அது ரசிகர்களை கவர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.