சாலைக்கு வந்த சசிகலா புஷ்பாவின் பொருட்கள்..!! வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!! பரபரப்பு

சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியேற்றிவிட்டு, வீட்டுக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் மேயராக 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இருந்து வந்தார். இதையடுத்து, ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், மாநிலங்களவையில் ஜெயலலிதா என்னை அடித்துவிட்டார் என்று சசிகலா புஷ்பா கூறிய சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது 2-வது திருமணம் தொடர்பான விவகாரத்திலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

சாலைக்கு வந்த சசிகலா புஷ்பாவின் பொருட்கள்..!! வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!! பரபரப்பு

இந்நிலையில், பாஜவில் இணைந்த சசிகலா புஷ்பா அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், மாநிலங்களவையில் எம்.பி.யாக இருந்தபோது டெல்லியில் மத்திய அரசு சார்பில் அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், சசிகலா புஷ்பாவின் பதவிக்காலம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இருப்பினும் வீட்டை காலி செய்யும்படி அரசு தரப்பில் இருந்து பலமுறை நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

சாலைக்கு வந்த சசிகலா புஷ்பாவின் பொருட்கள்..!! வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!! பரபரப்பு

இந்நிலையில் டெல்லி நார்த் அவென்யு பிளாக் பகுதியில் இருக்கும் சசிகலா புஷ்பா வீட்டிற்கு சென்ற மத்திய அரசு அதிகாரிகள், அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு அந்த குடியிருப்பிற்கு சீல் வைத்துள்ளனர். இதில், பாஜக மூத்த தலைவராக இருக்கும் சுப்ரமணிய சுவாமியையும் மத்திய அரசு வழங்கிய குடியிருப்பை உடனடியாக காலி செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Chella

Next Post

'வேலை போனாலும் அடித்தது ஜாக்பாட்’..!! ரூ.345 கோடியுடன் வெளியேறும் ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால்..!!

Fri Oct 28 , 2022
ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பராக் அக்ரவால் வெறும் கையுடன் விடைபெறப்போவதில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர்கள் கிடைக்கும்.   உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து ரூ.3.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால், திடீரென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை தராததால் ஒப்பந்தத்தை […]
'வேலை போனாலும் அடித்தது ஜாக்பாட்’..!! ரூ.345 கோடியுடன் வெளியேறும் ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால்..!!

You May Like