சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

சாத்தான்குளம் கொலை வழக்கு.. சர்ச்சையில் சிக்கிய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்.. யார் இவர்கள்..?

சாத்தான்குளம் கொலை வழக்கு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஃப்ரெண்ட்ஸ் போலீஸ் ஆஃப் போலீஸ் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்க முடிகிறது. உண்மையில் யார் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்..? இந்த அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டது..? அவர்களின் பணி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

சாத்தான்குளம்

காவல்துறையுடன் இணைந்து மக்களை சேவையாற்ற விரும்பும் இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டதே ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு. 1993-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்போதைய எஸ்.பி பிரதிப் வி.பிலிப் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் இந்த அமைப்பு. காவல்துறையினரை பொதுமக்கள் நேரடியாக அணுகுவதில் இருந்த பயத்தை போக்கி, நல்லுறவை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டது. பொதுமக்களில் ஒருவராக இருந்து கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிவதே இவர்களின் முதன்மை பணியாகும்.

pradeep

பின்னர் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை, 1994-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார். இந்த அமைப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் செயல்பாடுகள் பெரிய அளவில் பேசப்படவே விருதுகள் குவிந்தன. இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் சேர வேண்டுமெனில், அவர்களுக்கு18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன.

ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர் அந்தந்த பகுதிகளில் ஹீரோக்களாகவே வலம் வர தொடங்கினாலும் கூட, அவர்களுக்கென, சட்ட அங்கீகாரம், பணி வரன்முறை, சீருடை, ஊதியம் என எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க தன்னார்வத்தின் அடிப்படையிலேயே பிரண்ட்ஸ் ஆஃப் போலீசாக பணியாற்ற முடியும். குற்றம் தொடர்பான தகவல்களை திரட்டி, அவற்றை காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, வாகன சோதனை, காவல் நிலைய பணிகள் உள்ளிட்டவற்றிலும் ஈடுபட தொடங்கினர்.

Temporary ban on Friends of Police in 6 Districts including Trichy Trichy

ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசாக இருந்தவர்கள் கைகளில் லத்திகளுடன் வலம் வந்ததாக குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. காவல்துறையினரின் வேலையை குறைக்கும் வகையில் இவர்கள் செயல்பட தொடங்கினர். தாங்களும் காவலர் என்ற அதிகாரப்போக்குடன் செயல்பட தொடங்கியதன் விளைவே சாத்தான்குளம் சம்பவம் என்ற குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவல்துறையினர் சித்ரவதை செய்த போது, பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசில் இருப்பவர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்தனர் என அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு செயல்பட இடைக்கால தடைவிதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணை, தீவிரமடைந்து வரும் நிலையில், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

எரித்து கொல்லப்பட்ட 14 வயது சிறுமி.. திருச்சியில் அரங்கேறிய கொடூர சம்பவம்.. போலீசார் தீவிர விசாரணை..

Mon Jul 6 , 2020
திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூரில் வசிப்பவர் பெரியசாமி. 9-ம் வகுப்பு படித்து வரும் அவரது மகள், இன்று மதியம் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். ஆனால் வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், பதறிப்போன பெற்றோர்கள் சிறுமியை தேடியுள்ளனர். இந்த சூழலில், அங்குள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சிறுமி […]
திருச்சியில்

You May Like