உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

“உன்னால ஒன்னும் *******.." மேஜிஸ்திரேட்டையே இழிவாக பேசிய சாத்தான்குளம் காவலர்.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..

சாத்தான்குளம் காவலர் ஒருவர் மேஜிஸ்திரேட்டையே இழிவாக பேசியதாக புகார் எழுந்ததையடுத்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளம்

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருவரின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த விவகாரத்தை, கோவில்பட்டி மாஜிஸ்திரேட், பாரதிதாசன் விசாரணை செய்துவருகிறார். அவர் விசாரணை நடத்துவதற்காக அவர் சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற போது, காவலர் ஒருவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை தர மறுத்துடன், மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவான வார்த்தைகளால் இழிவாக பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஜன் என்ற காவலர், “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” என்று மாஜிஸ்திரேட்டிடம் கூறியுள்ளார். ஏற்கனவே போலீசாரின் அராஜகம் தமிழக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாஜிஸ்திரேட்டையே சாத்தான்குளம் காவலர் ஒருவர் அவமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sathankulam magistrate

இந்த சூழலில் சாத்தான்குளம் காவலர்கள், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காதது குறித்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு புகார் ஒன்றையும் அனுப்பினார். இந்நிலையில் இது குறித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம். அந்த உத்தரவில் “சாத்தான்குளம் ஏ.டி.எஸ்.பி பிரதாபன் மற்றும் டி.எஸ்.பி குமார், காவலர் மகாராஜன் ஆகியோர், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததுடன், ஆவணங்களை தர மறுத்துள்ளனர். மேலும் மகாராஜன் என்பவர் மாஜிஸ்திரேட்டையே அவதூறாக பேசியுள்ளார் என்பது அவரது அறிக்கையில் தெளிவாகிறது.

எனவே இந்த மூவர் மீது நீதிமன்றம், குற்றவியல் அவமதிப்பு வழக்கு தொடர்கிறது. மேலும் இவர்களை பணியிடமாற்றம் செய்தால் மட்டுமே விசாரணை எவ்வித இடையூறுமின்றி தொடரும். எனவே அரசு அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் 3 பேரும் நாளை காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்..

Tue Jun 30 , 2020
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை, 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாட்டில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 5.50 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.மறுபுறம், இந்திய – சீன எல்லைப் பகுதியில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இது, நாடு முழுதும் பெரும் […]
திருக்குறள்

You May Like