உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

சாத்தன்குளம் விவகாரம்… காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீசாருக்கு 12 மணி நேரத்தில் பணி நியமனம்…

சாத்தன்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பின்னிக்ஸ் இறந்த வழக்கு தொடர்ப்பாக விசாரணைக்கு சென்ற மாஜிஸ்திரேடை தரகுறைவாக பேசியதற்காக காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்ட ஏஎஸ்பி, டிஎஸ்பி க்கு பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.

561996

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பின்னிக்ஸ் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்டு கடுமையாக தாக்கியதில் அப்பா மகன் இருவரும் உயிரழந்தனர். இதனை போலீசார் உடல்நல குறைவாக இறந்ததாக நாடகமாடியது வெளிச்சத்துக்கு வரவே இதில் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த இரட்டை கொலை விவாகரத்தில் இந்திய அளவில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இராகுல் காந்தி முதல் சினிமா, கிரிக்கெட் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பி வருகின்றனர். மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு வலுசேர்த்தது.

இந்த விவாகரம் தொடர்பாக சாத்தன்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்ற குற்றவியல் நடுவர் பாரதிதாசனை தரக்குறைவாக பேசியதுடன் மிரட்டிய குற்றத்திற்காக எஸ்பி அருண்பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிராதபன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். எஸ்பி அருண்பாலகோபாலன் இந்த சம்பவத்தை நேர்மையாக கையாளவில்லை என குற்றசாட்டு எழுந்ததால் அவரும் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

மேலும் தூத்துக்குடி எஸ்பி யாக விழுப்புரத்தில் பணிபுரிந்த எஸ்பி ஜெயகுமார் நியமிக்ப்பட்டுள்ளார். இந்த நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிராதபன் ஆகியோருக்கு 12 மணி நேரத்திலேயே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி அலுவலமே பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் ஏஎஸ்பியாக பணியிலிருந்த குமார் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு ஏஎஸ்பி ஆகவும், டிஎஸ்பியாக இருந்த பிரதாபன் புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு ஏஎஸ்பியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1newsnationuser5

Next Post

உச்சத்தில் மையம் கொண்ட பெட்ரோல், டீசல் விலை!

Wed Jul 1 , 2020
இன்றைய நிலவரப்படி (01.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் மிக பெரும் விலையேற்றம் அடைந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் மையம் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறியது. இதற்கு அமெரிக்க டாலருக்கு […]
Upfront 1 3 Sep24 1

You May Like