“சத்யா செத்து போவான்னு நினைக்கவேயில்ல.” கண்ணீருடன் வாக்குமூலம் கொடுத்த சதீஷ்.!

சென்னையை அடுத்துள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதியன்று கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி சதீஷ் என்ற நபர்கொலை செய்தார். இதனையடுத்து, சத்யா கொலையில் சதீஷ் கைது செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், சதீஷ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குமூலத்தில், “என்னிடத்தில் அவர் பழகுவதும், பேசுவதும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரது தாயார் அவருக்கு வேறொரு இடத்தில் திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ளார். அதன்பின்னர், சரிவர தன்னிடம் பேசவில்லை.” என விசாரணையின் போது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “சத்யா ஒரு நாளும் நான் படிக்கவில்லை, வேலைக்கு செல்லவில்லை, பணம் சம்பாதிக்கவில்லை என்பதற்காக என்னிடம் சண்டை போட்டதே இல்லை. நான் இப்படி தள்ளி விட்டதால் சத்யா இறந்து போவார் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை.” என வருத்ததுடன் அவர் தெரிவித்துள்ளார். சிபிசிஐடி விசாரணையில் சதீஷ் வீட்டில் அறை முழுவதும் சத்யாவின் பெயரை எழுதி வைத்துள்ளார் என தெரிய வந்ததுள்ளது.

Baskar

Next Post

தனது ரசிகருக்கு அங்கீகாரம் கொடுத்த தளபதி.! மெய் சிலிர்த்து போகும் ரசிகர்கள்.!

Sat Oct 29 , 2022
தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இதை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை தில்ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார். இதில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிவடைந்த நிலையில், இதன் மற்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றதுஇந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இது […]
’யாரும் இதை செய்யக்கூடாது’..!! ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நடிகர் விஜய்..!!

You May Like