சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்படும் அல்-வலீத் பின் காலித் பின் தலால் காலமானார்.
2005 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த போது, அவர் நேரிட்டக் கார் விபத்தில் அவரது மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக ரியாத்தில் அமைந்துள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவ நகரத்தில், வெண்டிலேட்டர் உதவியுடன் கடந்த 20 ஆண்டுகளாக ஹோமா நிலையில் இருந்து வந்தார்.
அமெரிக்கா மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிறிய அசைவுகளைக் காட்டுவதைத் தவிர கோமாவிலிருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் இளவரசர் அல் வலீத் 36-வது வயதில் மரணமடைந்துள்ளார். அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் பின் அப்துல் அஜிஸ் தனது மகனின் மறைவுச் செய்தியை உறுதிப்படுத்தினார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், அல்லாஹ்வின் ஆணை மற்றும் விதியின் மீது முழு நம்பிக்கையுடனும் ஆழ்ந்த சோகத்துடனும் துக்கத்துடனும் எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் தலால் அல்லாஹ்வின் கருணையால் இன்று காலமானார்” என கூறியிருந்தார். ஏப்ரல் 1990 இல் பிறந்த இளவரசர் அல் வலீத், சவுதி அரேபியாவின் முக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் கலீத் பின் தலால் அல் சௌத்தின் மூத்த மகனும், கோடீஸ்வரர் இளவரசர் அல் வலீத் பின் தலாலின் மருமகனுமாவார்.
Read more: நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யாவின் பிறந்த நாள் இன்று.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?