இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கொரானாவிடமிருந்து வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளுங்கள் : வல்லுநர்கள் கருத்து

கொரானா வைரஸ் பிடிக்கு மத்தியில் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதை விட, உயிரை காப்பாற்றிக்கொள்வது முக்கியம் என சர்வதேச வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
images 29

கொரானா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத கிருமி உலக நாடுகளை மிரட்ட, வல்லரசு நாடான அமெரிக்காவே அதனை சமாளிகக் முடியாமல் திணறிக்கொண்டு உள்ளது.


உலக அளவில் இந்த வைரசால் பாதிப்பிற்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்க, இன்னொரு புறம் பலியானவர்களின் எண்ணிக்கையும் 65 ஆயிரத்தை எட்டி இருக்கிறது.

உலக மக்கள் தொகையில் சுமார் 400 கோடி பேர், தங்கள் நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், கொரானா பிடியில் இருந்து உயிரைக் காத்துக் கொள்ளவும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர். கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரங்களை இழந்து அன்றாட வாழ்விற்கே அல்லல்பட்டு வருகிறார்கள். உலக பொருளாதாரமே பெரும் சரிவுடன் முடங்கிப்போய் உள்ளது.

images 30

இதையொட்டி உலக சுகாதார நிறுவனம் ‘ஹூ’வின் தலைவரான டெட்ரோஸ் அதானோமும், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜார்ஜீவாவும் கூட்டாக, இங்கிலாந்தில் இருந்து வெளிவருகிற ‘தி டெய்லி டெலகிராப்’ நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதி உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

வாழ்வாதாரங்களை பாதுகாத்துக்கொள்வதை விட உயிரைக்காப்பாற்றிக்கொள்வது இப்போது முன்நிபந்தனையாக அமைந்திருக்கிறது.

உலக பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்றால் முதலில் கொரானா வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாக வேண்டும்.

கொரானா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் எல்லாம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு நாடும் இதன் பரவலை கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று கருதி அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதற்காக நாடுகள் எல்லாம் தங்கள் சமூகத்தையும், பொருளாதாரத் தையும் செயல்பாட்டில் இருந்து நிறுத்தி வைத்துள்ளன. இது கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நாடுகள் கொடுக்கிற விலையாக அமைந்துள்ளது. ஒன்று உயிரைக்காப்பாற்ற வேண்டும் அல்லது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இது ஒரு குழப்பமான நிலை ஆகும்.

பல நாடுகளில் குறிப்பாக ஏழை நாடுகள், கொரானா வைரசை எதிர்கொள்வதற்கு, அந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் இல்லை. எல்லா நாடுகளும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்கு அதிகமாக செலவிட முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உலக அளவிலான சுகாதார நெருக்கடியின் போக்கும், உலக பொருளாதாரத்தின் தலைவிதியும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடு ஒன்றாக இணைந்து இருக்கின்றன. பொருளாதாரம் மீள்வதற்கு, கொரானா வைரசுக்கு எதிராக போரிட வேண்டியது அவசியம் ஆகி உள்ளது.

இது மனித இனத்தில் மிகவும் இருண்ட தருணம் ஆக இருக்கிறது. வளர்ந்து வரும் சந்தைகளில், வாழ்கிற மக்களுக்காக தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரின் கூட்டு வேண்டுகோளாக இருக்கிறது.

images 4

நிதி நிலைமைகள் இறுக்கமாக அமைந்துள்ள நிலையில், கொரானா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள் தொழிலாளர்களையும், தொழில் நிறுவனங்களையும், பொருட்கள் வினியோக தொடரையும் பாதித்துள்ளதால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் 85 நாடுகள் சர்வதேச நிதியத்தின் அவசர நிதி உதவியை கேட்டு உள்ளன. அவசர காலத்துக்கு பயன்படுத்த வேண்டிய நிதியின் அளவை சர்வதேச நிதியம் சுமார் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்த்தி உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தமட்டில், முக்கிய மருந்துப்பொருட்கள், மருத்துவ உபகரணங்களை நாடுகள் கொள்முதல் செய்வதற்கு முன்கூட்டியே கொள்முதல் ஒப்பந்தங்களை எளிதாக்கி, ஒருங்கிணைக்கிற வேலையை செய்யும். குறைவான நேரமும், எல்லைக்குட்பட்ட வளங்களுமே இருக்கிற சூழலில், நாம் ஒன்று பட்டு செயல்பட்டு, உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதற்கு சரியான முன்னுரிமை அளிக்க கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கட்டூரையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

1newsnationuser4

Next Post

பிரதமர் மோடியின் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம்..

Sun Apr 5 , 2020
கொரானா தடுப்பு நடவடிகைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, நடைபெறும் முதல் அமைச்சரவைக் குழுக் கூட்டம் இதுவாகும். மேலும், இந்திய வரலாற்றில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் முதல் அமைச்சரவைக் குழுக் கூட்டம் […]
modi 4

You May Like