சவுக்கு சங்கர் உடல் நிலை பாதிப்பு …மருத்துவமனையில்அனுமதி .

சிறையில் உண்ணாவிரதம் இருந்து  வந்த சவுக்கு சங்கருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைஅடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர்  சிறையில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களாக சவுக்கு உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார். சிறையில் கொடுக்கப்படும் உணவை சாப்பிடாமல் இருந்து வந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பற்றி விமர்சனம் செய்தார். தீர்ப்பை விமர்சனம் செய்தது கோர்ட்டைஅவமதிக்கும் செயல். தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கை விசாரித்தார். இதில் சவுக்கு மன்னிப்பு கேட்கவும் மறுத்தார்.

இதனால் 6 மாதகாலம் சிறையில்இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர். லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த அவர் துறை ரீதியான நடவடிக்கையால் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது சிறைக்கு சென்றதால் முழுமையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியமும் நிறுத்தப்பட்டது.

இதனிடையே இவரது தாயார் கமலா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சங்கர் சிறையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தண்டனையால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்காத நிலையில் சட்ட உதவியை நாட முடியாத சூழலில் ஒரு தாயாக நான் அவதிப்படுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கை நீதிக்கு முரணானது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

Next Post

மைதானத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு … கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தம்…

Sun Oct 2 , 2022
கவுகாத்தியில் நடைபெறும் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளிடையேயான போட்டியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றபோது பாம்பு மைதானத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கவுகாத்தியில் 2-வது டி20 போட்டி தொடங்கியபோது திடீனெ பாம்பு புகுந்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. முதலில் தென்னாப்பிரிக்கா பந்து வீசத் தொடங்கியது. ரோகித் மற்றும் கே.எல் ராகுல் அதிரடியாக விளையாடினர். 7வது ஓவர் விளையாட்டின்போது கே.எல் ராகுல் ஏதோ வருகின்றது என அறிந்து தென்னாப்பிரிக்க வீரர்களைஅங்கிருந்த […]

You May Like