பள்ளி மாணவர்களே 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை…

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 1-ம் தேதி முதல் 3-ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது.

தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு சென்னை அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு மழை பெய்யும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.

தமிழகத்திற்கு மழையை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை நேற்றைய தினம் தொடங்கியது. இந்நிலையில்இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புஇருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நவம்பர் 1ம் தேதி சென்னையில் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வெதர்மேன் கணித்திருக்கின்றார்.அத்துடன் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை போல இந்த ஆண்டும் அதிகமாகவே மழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 1, நவம்பர் 2, நவம்பர் 3 ஆகிய தேதிகளில் விடுமுறை இருக்குமா இல்லை இந்த வடகிழக்கு பருவமழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறையே இருக்காதா என்ற கருத்து கணிப்பு இருந்தது. இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பதிலளிக்கையில் ஒரு வேளை 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்குமா? அடுத்த வாரம் பள்ளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.என பதில் அளித்துள்ளார். அதே வேளையில் ஆட்சியர்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Next Post

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மாதிரி வாழக்கூடாது… உதயநிதி கூறிய அறிவுரை

Sun Oct 30 , 2022
கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் இல்லத்திருமணவிழாவில் பங்கேற்றபின் மணமக்களுக்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மாதிரி வாழக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் உதய சூரியன் இல்லத்தில் திருமண விழா நடைபெற்றத. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்கள் டாக்டர் பர்னாலா- டாக்டர் சங்கவியை நேரில் ஆசிர்வாதம் செய்தார். பின்னர் மணமக்களுக்கு அறிவுரை வழங்கியபோது, ’’ மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். கண்டிப்பாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். […]

You May Like