நாளை முதல் பள்ளிகளை மூட உத்தரவு..!! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால், தொடக்க பள்ளிகளை நாளை முதல் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசு குறைந்து இயல்பு நிலை திருப்பும் வரை டெல்லியில் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மோசமான அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லி முழுவதையும் வியாபித்திருக்கிறது. இதனால், காற்றில் பிராண வாயுவின் விழுக்காடு பெருமளவு குறைந்து காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

நாளை முதல் பள்ளிகளை மூட உத்தரவு..!! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

குறிப்பாக உத்தரப்பிரதேசம் – டெல்லி எல்லையில் உள்ள நொய்டா நகரத்தில் காற்றின் தரம் அபாயகரமான அளவான 562 புள்ளிகளை எட்டியிருப்பதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், காற்றின் தரம் மேம்படும்வரை தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கான வெளிப்புற செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன எண் அடிப்படையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Chella

Next Post

’மக்களே உஷார்’..!! ’மழைக்காலங்களில் வேகமாக பரவும் நோய்கள்’..!! ’தப்பிக்க இதுதான் ஒரே வழி’..!!

Fri Nov 4 , 2022
மழைக்காலங்களில் நோய்கள் எளிதாக பரவுவதால், அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்… தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழைக்காலங்கள் வந்தாலே நோய் தொற்று பரவலும் அதிகரித்து விடும். அதனை தடுக்க அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]

You May Like