பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வந்த சுற்றறிக்கையில் பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கட்டாயம் முகக்கவசம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வழியாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்ளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பொது தேர்வு எந்த குழப்பமும் இன்றி நல்ல முறையில் நடந்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பள்ளி வளாகம் அடிகடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். விடைத்தாள் முகப்பு சீட்டு அனைத்தும் மாவட்ட தேர்வுத்துறையிடம் முன்னதாகவே பெற்று போதுமானவரை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பழைய நுழைவுச்சீட்டு எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு உரிய வழிமுறைகள் மற்றும் தேர்வு மையங்களை முன்னகூட்டியே அறிவிக்க வேண்டும். வேறு மாநிலம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்வு மையத்தை அடந்துவிடுவார்களா என உறுதி செய்ய வேண்டும். இவற்றுடன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 முகக்கவசமும், பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு தால ஒரு முககவசமும் வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.