கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம்..!! குடியிருப்புக்குள் கடல் நீர் புகும் அபாயம்..!! அச்சத்தில் பொதுமக்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம். அவ்வப்போது ஏற்படும் கடல் அரிப்பால்
கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது வாடிக்கையான நிகழ்வு என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் மற்றும் அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்று வீசுவதால், கடல் சீற்றத்துடனே காணப்படுகிறது. இந்நிலையில், அழிக்கால் குளச்சல் மீனவ கிராமங்களில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பியது.

கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததோடு சில வீடுகளையும் சூழ்ந்து கொண்டது. தொடர்ந்து கடல் சீற்றம் அதிகரிக்கும் நிலையில் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Chella

Next Post

30 நிமிடங்கள் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்ட மெஸ்ஸி

Tue Jun 13 , 2023
சீனாவின் தலைநகரில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட சனிக்கிழமை அன்று சீனா வந்தார் மெஸ்ஸி. பெய்ஜிங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை சோதனை பணியின் போது சீன காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மெஸ்ஸியிடம் சீன விசா இல்லாதநிலையில், அவர் அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல் ஸ்பெயின் பாஸ்போர்ட்டுடன் பயணித்ததால் குழப்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெஸ்ஸியின் விசா வருவதற்கு தாமதமாகியதால், […]

You May Like