தாய்லாந்தில் புவெங் கான் மாகாணத்தில் ஒரு காட்டுப்பகுதில் கண்டரியப்ட்டுள்ள குகை இறந்த இராட்சத பாம்பு கல்லாக மாறியதால் உருவானதாக சொல்லப்படுகிறது. உண்மை என்ன?

புவெங் கான் மாகாணத்தில் புவெங் காங் லாங் என்ற இடத்தில் அமைத்துள்ள ஒரு காட்டு பகுதியில் அமைத்துள்ளது இந்த குகை. இதன் தோற்றம் பார்ப்பதற்கு ஒரு இராட்சத பாம்பு சுண்டு கிடப்பதை போல் உள்ளது. இதில் அதிசயம் என்னவென்றால் பாம்பின் செதில்கள் இருப்பதை போலவே குகையில் வெளித்தோற்றம் காணப்படுகிறது.

இது ஒரு இறந்த இராட்சத பாம்பாக இருக்கலாம் என மக்கள் நம்புகின்றனர். பாம்பில் உடலில் இருந்த தாதுக்கள் அழுத்தத்தில் பாறைகளாக மாறியிருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் பல வருடங்களுக்கு முன்பு உள்ள பாம்புகளின் எச்சங்கள் அழுகுவதில்லை என்ற கருத்தும் உலாவி வருகிறது.

இந்த குகையை வேறு ஒரு நாக பாம்பின் தலையுடன் இணைத்து இணையவாசிகள் சுவாரஸ்யத்தை கிளப்புகின்றனர்.

பல மர்ம கதைகள் கொண்ட இந்த நாகா குகை தாய்லாந்தில் புவலங்கா தேசிய பூங்கா, புவெங் காங் லாங் மாவட்டம், புவெங் கான் மாகாணம், வாட் தாம் சாய் மோங்கோனுக்கு அருகில் உள்ள ஒரு அடர்ந்த காட்டு பகுதியில் அமைத்துள்ளது.