டிரைவர் இல்லாமல் இயங்கும் மின்சார கார்!… முதல் முறையாக பயணிகளுடன் சோதனை ஓட்டம் வெற்றி! அமேசான் அறிவிப்பு!

டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் காரின் சோதனையோட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக அமேசான் (Amazon) நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பல்வேறு தொழில்துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில், அந்தநிறுவனம் தானாக இயங்கும் (செல்ஃப் டிரைவிங்) வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஸுக்ஸ் (Zoox) எனும் யூனிட் வாயிலாகவே ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வாகனங்களை அமேசான் தயாரித்து வருகின்றது.

இந்த காரை 2020 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஸூக்ஸ் காட்சிப்படுத்தியது. இதையடுத்து பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது இந்த வாகனத்தின் சோதனையோட்டமே வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களே பயணிகளாக பயன்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் ஸுக்ஸ் கார் பொதுவெளியில் இயங்குவது இதுவே முதல் முறை ஆகும். மேலும் ஒரே நேரத்தில் 4 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ல இந்த கார் மணிக்கு 56 கிமீ வேகத்தில் பயணிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Kokila

Next Post

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...! மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து அதிரடி உத்தரவு...! முழு விவரம் இதோ...

Wed Feb 15 , 2023
சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேலும் 2 ஆண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் CMRL ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளைச் செய்ய வசதியாகப் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுக் கடந்த 01.02.2023 ம் தேதி முதல் ஒரு […]

You May Like