சுய உதவிக்குழுவும் சூப்பர் வாய்ப்பும்..!! ரூ.10 லட்சம் வரை கடன்..!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

சுய உதவிக் குழுக்கள் என்றாலே பெண்களின் அமைப்பு என்றுதான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாட்டில் மொத்த 1.2 கோடி சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இதில், 12% குழுக்கள் ஆண்களால் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இத்திட்டம் தொடர்பான போதிய விழிப்புணர்வு பலரிடத்திலும் இல்லை. சுய உதவி குழு என்பது கிராம/நகர்ப்புற ஏழை மக்களுக்கான ஒரு சிறிய குழு. உறுப்பினர்கள் தங்களின் அரசியல்/சமுதாய/பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்வதற்காக தாமாக முன்வந்து அமைக்கப்படும் குழு. குறைந்தது 20 உறுப்பினர்கள் தாமாக முன் வந்து இத்தகையதொரு குழுவை உருவாக்கிக் கொள்ள முடியும்.

சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய/மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ், வெளிப்படைத் தன்மையுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கு ஆதார நிதியாக ரூ.10,000 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. சுய வேலை வாய்ப்பு தனிநபர் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வறுமை நிலையில் இருந்து முன்னேற, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

Self Employment Program Self Help Group (SEP – SHG) திட்டத்தின் கீழ், குறைந்தது 5 நபர்களைக் கொண்டு சுய உதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவி மூலம், வருவாய் தரும் திட்டங்களில் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடலாம். தற்போது செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களை, அடுத்த கட்டமாக பெரிய உற்பத்தியாளர் கூட்டமைப்பாக வலுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த கூட்டமைப்புகள், பொருளாதாரங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. எனவே, உங்கள் பகுதியில் உள்ள ஒத்த கருத்துடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுய உதவி குழுவை அமைத்துக் கொள்ளுங்கள்.

Chella

Next Post

அசத்தும் மத்திய அரசு...! மொத்தம் 11.12 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இலவச குடிநீர் இணைப்பு...!

Tue Feb 14 , 2023
மொத்தம் 11.12 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின்கீழ், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பாதுகாப்பான குடிநீர் விநியோகத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இயக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ஊரகப் பகுதிகளில் […]

You May Like