ஊழியர்களுக்கு செம ஆஃபர்..!! ஒரு குழந்தை பெற்றெடுத்தால் ரூ.62 லட்சம்..!! மூன்று குழந்தைகளுக்கு ரூ.1.82 கோடி..!!

தென் கொரியாவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.62 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. 2022ஆம் ஆண்டு 0.78 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2026ஆம் ஆண்டில் 0.59 ஆக சரியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 1977ஆம் ஆண்டுக்கு பின் இல்லாத வகையில், மக்கள் தொகை 3.5 கோடி அளவிற்கு சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான், தென்கொரியாவில் உள்ள Booyoung குழுமம் என்கிற கட்டுமான நிறுவனம், ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.62 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல், 3 குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ.1.82 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதே போல பியாங்யாங் குழும நிறுவனம் குழந்தை பெற்றுக் கொண்ட தனது ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.43.58 கோடி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

குழந்தை பிறப்பு விகிதங்களை அதிகரிக்க சீனாவிலும் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் டிராவல் ஏஜென்சியான Trip.com என்ற சீன நிறுவனம், தங்களது ஊழியர்களின் குழந்தைக்கு ஒன்றிலிருந்து ஐந்து வயது ஆகும் வரை வருடம் தோறும் இந்திய மதிப்பில் ரூ.1.1 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser6

Next Post

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற ஆதார் அட்டை கட்டாயம்..!! பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!!

Tue Feb 13 , 2024
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கும் இந்த ஆதார் எண் பயன்படுகிறது. ஆதார் எண் ஒருவரது வங்கிக் கணக்கு, பான் கார்டு, மின்சார சேவை உள்ளிட்டவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இன்று ஆதாரை வைத்து பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. எனவே, பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறப்பு மற்றும் […]

You May Like