வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

பங்குச் சந்தையில் ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பு..!

இந்திய பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

pjimage 31 1

உலக அளவில் கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், இந்தியப் பங்குச்சந்தையும் நேற்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

நேற்று காலையில், வணிகம் தொடங்கியதுமே பங்கு சந்தை இறங்கு முகமாகவே காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை நேற்று ஒரே நாளில் வர்த்தகத்தின் இடையே 3,304.30 புள்ளிகள் அளவுக்குக் குறைந்தது. இருப்பினும் வர்த்தகத்தின் முடிவில் 2,919.26 புள்ளிகள் சரிந்து 32,778.14 புள்ளிகளில் நிலைப் பெற்றது. இதனால் ஒரேநாளில் சென்செக்ஸ் 8.18 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.

தேசியப்பங்குச்சந்தை நிப்டியில் 868.25 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 9,590 புள்ளிகளில் வணிகம் முடிந்தது. இதனால் தேசிய பங்கு சந்தை 8.90 சதவீதம் சரிந்தது.

கடந்த 9-ம் தேதி இதேபோன்ற மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், ஒரே வாரத்தில் 2-வது முறையாக இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொண்டது. சமீபகாலங்களில் பெரும் முன்னேற்றத்தை அடைந்த பங்குச்சந்தை இந்த வாரத்தில் மட்டும் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவு என கூறப்படுகிறது.

பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 72 மணிநேரத்தில் ரூ.18 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மும்பைப் பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கியின் பங்குகளின் மதிப்பு 13 சதவீதம் அளவிற்கு இழப்பை சந்தித்தது. அடுத்தபடியாக ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, டிசிஎஸ், டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் இழப்பில் முடிந்தன. மேலும், ரியல்எஸ்டேட், உலோகம், வங்கித்துறை, நிதித்துறை, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

1newsnationuser4

Next Post

பாஸ்ட் & ஃப்யூரியஸ் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..!

Fri Mar 13 , 2020
பாஸ்ட் & ஃப்யூரியஸ் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சீரிஸ் படங்களின் வரிசையில், பெரும் வரவேற்பை பெற்று வரும் படம் பாஸ்ட் & ஃப்யூரியஸ். இப்படத்தில் நாயகர்களும் வில்லன்களும் கார்களை கொண்டு செய்யும் அசாதாரண சாகசங்களுக்கு ரசிகர்கள் பெருத்த வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன் காரணமாகவே அந்த பட வரிசை தொடர் வெற்றிகளை குவித்து அதன் தொடர்ச்சியாக, அதன் 9-வது பாகமான FF9 திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் […]
sakshipost 2019 02 708db769 14d8 4885 aaa3 4fc793deb8eb FAST AND FURIOUS 9

You May Like