சீரம் நிறுவனத்தின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி 2டோஸ் ரூ.2,000..! எப்போது கிடைக்கும்?

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் பிரதானமானதாக இருக்கின்றன. இவற்றுள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை (cervical cancer) ஏற்படுத்தும் Human papillomavirus-க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை வெளிநாடுகளிலிருந்து பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் அதன் உற்பத்தியை இந்தியாவிலேயே தொடங்கியிருக்கிறது கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனம்.

இந்நிலையில் சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி, செர்வாவாக்(HPV), இரண்டு டோஸ் ரூ.2,000-க்கு, இந்த மாதம் சந்தையில் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. கடந்த மாதம் ஜனவரி 24ஆம் தேதி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (HPV) தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா CEO ஆதார் பூனவல்லா மற்றும் அரசு மற்றும் சீரம் நிறுவனத்தின் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார்.

மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு சீரம் நிறுவனத்தின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் ஒரு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதில், தனியார் சந்தையில் HPV தடுப்பூசியின் விலை இரண்டு டோஸ் ரூ.2,000 ஆகும், இது மற்ற HPV தடுப்பூசிகளை விட மிகக் குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் சங்கங்கள் நிறுவனம் HPV தடுப்பூசியை நாடிய நிலையில், சீரம் நிறுவனம் இந்த மாதம் முதல் CERVAVAC ஐ தனியார் சந்தையில் வெளியிடத் தயாராக உள்ளது. அரசே கொள்முதல் செய்தால் சீரம் நிறுவனம் HPV தடுப்பூசியை மிகவும் மலிவு விலையில் வழங்கும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான HPV தடுப்பூசியை 9 முதல் 14 வயதுடைய பெண்களுக்கான தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் ஜூன் மாதம் வெளியிட உத்தேசித்துள்ளது, இதற்காக ஏப்ரல் மாதத்தில் உலகளாவிய டெண்டர் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 80,000 பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாழ் பாதிக்கப்படுகிறார்கள் அதில் 35,000 பேர் இறப்பதாக ஆய்வின் முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு…..! தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு……!

Fri Feb 10 , 2023
ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்துத்துவ கொள்கையை நாடு முழுவதும் பரப்பும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. இருந்தாலும், அந்த அமைப்புக்கு நாட்டுப்பற்று அதிகம் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்துத்துவ கொள்கையை பரப்புகிறது என்ற ஒரே காரணத்திற்காக, அந்த அமைப்பை மதவாத இயக்கம் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். அந்த விதத்தில், சென்ற வருடம் அக்டோபர் மாதம் 2ம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 50 […]

You May Like