“பாலியல் தொழிலும்; தொழிலே..” மரியாதையான வார்த்தை பிரயோகம் வேண்டி பாலியல் தொழிலாளர்கள் மனு.!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்கள் கூறுவதற்கு ஐநா சபை அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பாக ஐநா அறிவிப்பாளர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய வார்த்தையால் மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த வார்த்தை பிரயோகம் தொடர்பாக பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் உட்பட 3600-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் வன்கொடுமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கை ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஐநா சபையின் 56வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. விபச்சாரத்தின் உலகளாவிய நிகழ்வுகளுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை முன்னிலைப்படுத்தி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. விபச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் இணைப்பை நன்கு புரிந்து கொள்வதற்கும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் மாநிலங்கள் எடுக்க வேண்டிய அணுகுமுறைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளிட்டவற்றை தெளிவுபடுத்துவதற்கு தங்களது கருத்துக்களை வழங்குமாறு ஐநாவின் அறிவிப்பாளர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த அறிவிப்பின்போது அவர் பயன்படுத்திய வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. தனது அறிக்கை தொடர்பான கருத்துக்கணிப்புகளை கேட்கும்போது பாலியல் தொழிலாளர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை நிராகரித்த ஐநாவின் சிறப்பு நிபுணர் பெண் விபச்சாரிகள் என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வார்த்தை பிரயோகத்திற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்பினர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் 3640 பேர் ஐநாவின் சிறப்பு நிபுணர் மற்றும் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக புகார் மனுவை அளித்துள்ளனர்.

பாலியல் தொழிலாளர்கள் மற்றும் தெற்காசியாவின் நட்பு நாடுகள் அமைப்பின் சார்பாக ஐநா சபை சிறப்பு அழைப்பாளருக்கு எதிராக மனுவை சமர்ப்பித்திருக்கும் வழக்கறிஞர்கள் விருந்தா குரோவர் மற்றும் ஆர்த்தி பாய் ஆகியோர் ஐநா சிறப்பு அறிக்கையாளர் அழைப்பு விடுத்திருப்பது ” பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் விதிமுறைகளுக்கும் போராட்டங்களுக்கும் எதிரான அனுமானங்களை காட்டுகிறது. இது அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி பெற்றவற்றிற்கு எதிரானது என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் ஆர்த்தி பாய்” ஐநா சபையின் உள்ளீடு பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் ஒரு கட்டமைப்பை ஆதரிக்கிறது. பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு இந்த அறிக்கை ஒருபோதும் வழி வகுக்காது” என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தெற்காசிய நட்பு நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பினர் மீனா சேசு ” பாலியல் தொழிலாளர்கள் மரியாதையான வார்த்தையை விரும்புகின்றனர். இது தொடர்பான விஷயங்களை பேசும் போது பாலியல் தொழில் பாலியல் சுரண்டல் மற்றும் பெண்களை கடத்துவது போன்றவற்றிற்கு பொதுவான ஒரு சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் சுரண்டலை ஒருமித்த பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிடுவது அணுகுமுறை இல்லை என தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஐநா சபைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள புகார் மனுவில் ” விபச்சாரம் மற்றும் விபச்சாரிகள் போன்ற வார்த்தை பதங்கள் இந்திய சட்டங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்திய உச்ச நீதிமன்றம் விபச்சாரம் மற்றும் விபச்சாரிகள் போன்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு பாலியல் தொழிலாளர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தும் படி அறிவுறுத்தியதாகவும் பெண்கள் அமைப்புகள் தங்கள் மனதில் குறிப்பிட்டு இருக்கிறது.

Next Post

”எந்த திட்டம் வந்தாலும் குறை சொல்வதே வேலை”..!! கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைத்த அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு..!!

Thu Feb 1 , 2024
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில், 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அண்மையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். ஆனால், ஒரு பக்கம் சென்னை மாநகரில் குடியிருந்து வரும் தென் மாவட்ட மக்களை சொந்த ஊர் பக்கம் செல்வதற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு செங்கல்பட்டு […]

You May Like