அதிர்ச்சி..!! ரேஷன் கடைகளில் இந்த பொருளுக்கு கடும் தட்டுப்பாடு..!! என்ன காரணம்..?

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவச தானியங்களை வழங்கியது. அதாவது ’பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது.

அதிர்ச்சி..!! ரேஷன் கடைகளில் இந்த பொருளுக்கு கடும் தட்டுப்பாடு..!! என்ன காரணம்..?

மேலும் தமிழ்நாடு, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து அதிக அளவில் அரிசி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை தொடர்ந்து கோதுமை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க மொத்தம் 3 கோடி கிலோ கோதுமை தேவை. ஆனால், இம்மாதம் 85 லட்சம் கிலோ மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நவம்பர் மாதம் அதிகபட்சமாக ஒரு ரேஷன் அட்டைக்கு 3 கிலோ கோதுமை மட்டுமே கிடைக்கும் நிலை உருவாக்கியுள்ளது. இதனால், தமிழகத்திற்கு கூடுதல் கோதுமை ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Chella

Next Post

உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு..!! சந்தேகப்பட்ட மனைவி..!! தூக்கில் தொங்கிய இருவர்..!! அதிர்ச்சி

Tue Oct 25 , 2022
தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு பேசியதால் கல்லூரி மாணவியும், அவருடைய உறவினரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்தவர் அஸ்வத் (44). இவரது வீட்டின் அருகே மதுரா (24) என்ற பி.எட். படிக்கும் மாணவி வசித்து வந்துள்ளார். அஸ்வத்தும், மதுராவும் உறவினர்கள் என்பதால், இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே தகாத உறவு […]

You May Like