மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் எதிரொலி சாலையோர கடைகளை அகற்றிய மாநகராட்சி. பொருட்களுடன் இடித்து தள்ளப்பட்ட கடைகள் – காவல்துறை குவிப்பு. தென் மாவட்டத்தில் பிரபல மருத்துவமனையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பனகல் சாலை முழுவதிலும் சாலை ஓரங்களில் அதிகளவிற்கு சாலையோர கடைகள் வைக்கப்பட்டதன் காரணமாக நோயாளிகள் வந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதன் எதிரொலியாகவும் மதுரை மாநகராட்சி சார்பில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருந்து அண்ணா பேருந்துநிலையம் வரை அரசு ராஜாஜி மருத்துவமனையை ஒட்டியுள்ள சாலையோரங்களில் இருந்த சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்
மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட மாநகராட்சி கடைகளை ஜேசிபி மூலமாக இடித்து தள்ளினர் அப்போது சில கடைகளில் பொருட்கள் இருந்த நிலையிலும் கூட அவசர அவசரமாக கடைகளை உடைத்து சேதப்படுத்தினர். இதனையடுத்து வியாபாரிகள் சிலர் மாநகராட்சி அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு காவல்துறையினரின் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது