இப்படி உங்களுக்கு நடக்கிறதா.? நீங்கள் சூனியத்தின் பிடியில் இருக்கீங்க..!

பொதுவாக பலருக்கும் கடவுளின் மீதும் நல்ல சக்திகள் மீதும் எந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறதோ அதே அளவிற்கு தீய சக்திகளான பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளின் மீதும் அளவுக்கதிகமாக நம்பிக்கை வளர்ந்து கொண்டே செல்கிறது. நவீன காலகட்டத்திலும் கூட மனிதனை மிஞ்சிய அபரிமிதமான சக்திகளும், அமானுஷ்யங்களும் இருந்து வருவது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

இவ்வாறு மனிதனை மிஞ்சிய அபரிமிதமான சக்திகளில் ஒன்று தான் சூனியம். நல்ல விஷயத்திற்காகவும், கெட்ட விஷயத்திற்காகவும் இந்த சூனியத்தை பயன்படுத்தி வந்தாலும் தற்போது அதிக அளவு தீமையை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களிற்கு தான் சூனியம் பயன்பட்டு வருகிறது. ஒரு சில அறிகுறிகளின் மூலம் சூனியம் ஒருவருக்கு வைக்கப்பட்டதா இல்லையா என்பதை குறித்து அறியலாம்?

ஒரு நபரின் மீது சூனியம் வைக்கப்பட்டால் அந்த நபர் தன்னை மீறி ஒரு சில செயல்களை செய்வார். அதாவது, தனக்குத்தானே பேசிக் கொள்வது, காரணமின்றி அளவுக்கு அதிகமாக கோபப்பட்டு பிறரை துன்புறுத்துவது, திடீரென்று நோய்வாய்படுவது, நன்றாக போய்க் கொண்டிருந்த வியாபாரத்தில் திடீர் நஷ்டம், வேலை மற்றும் படிப்பில் ஆர்வம் இல்லாமல் போவது, எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் தொடர் தோல்வி அடைவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அந்த நபருக்கு சூனியம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஒருவருக்கு கனவுகள் வருவது என்பது சாதாரண விஷயமாகும். ஆனால் இந்த சூனியம் வைக்கப்பட்ட நபருக்கு தினமும் மோசமான மற்றும் கெட்ட கனவுகள் வரும். இந்த நபரின் நகங்கள் கருமையாக மாறிவிடும். வீட்டில் பூஜை அறையில் அந்த  நபர் செல்லும்போது விளக்கு தானாக அனைவது, வீட்டில் வைத்துள்ள துளசி செடி காய்ந்து போவது, திடீரென்று எலுமிச்சை பழம், குங்குமம் போன்ற பொருட்கள் வீட்டின் வாசலில் கிடைப்பது, இறந்த பறவைகள் வீட்டு வாசல் முன் விழுவது, வீட்டில் வளர்த்த செல்லப்பிராணிகள் திடீரென்று உயிரிழப்பது போன்ற நிகழ்வுகள் வீட்டில் நடந்தால் அந்த நபருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாக கருதப்பட்டு வருகிறது.

1newsnationuser5

Next Post

9 தலைமுறைகளாக இல்லை!… அந்த நிலை மாறும்!… நிச்சயம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!… அண்ணாமலை!

Mon Feb 5 , 2024
9 தலைமுறைகளாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது. இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் பிரசார வாகனத்தில் இருந்தபடி பேசியதாவது:- […]

You May Like