தற்போது பெரும்பாலும் நம் பிரெஷான உணவுகளை விட பிரிட்ஜில் வைத்த உணவுகளையே அதிகம் எடுத்துக்கொள்கிறோம். அப்படி வைத்தாலும் சில பொருட்கள் வீணாவதை அன்றாடம் பார்க்கிறோம்.

சில உணவு பொருட்களை பிரிட்ஜில் வைக்காமல் எவ்வாறு சமையலுக்கு பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கருவேப்பிலை:
கருவேப்பிலையை பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை. மாறாக வெயிலில் நன்றாக காய வையுங்கள். பின்பு காய்ந்த இலைகளை எடுத்து பொடி போட்டு ஒரு டப்பாவில் எடுத்துக்கொள்ளலாம். இது எத்தனை நாட்கள் ஆனாலும் வீணாகாது. மேலும் நீங்கள் சமைக்கும் உணவில் சேர்ந்து கொண்டால் யாரும் வெளியே எடுத்து போட்டு விடாமல் உணவோடு சாப்பிட்டு விடுவார்கள். அதன் பயனையும் பெறுவார்கள்.

புதினா:
புதினா பிரிட்ஜில் வைத்து சில நாட்களில் அழுகி போகும் தன்மை கொண்டது. இவ்வாறு வீணாக்காமல் அதனையும் வெயிலில் காய வைத்து பொடியாக்கி வைத்து கொள்ளலாம். இதனை காலையில் டீ போன்றவற்றில் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இந்த பொடியும் வருடக்கணக்காக பாதுகாக்கலாம்.

மாவு:
என்ன தான் பிரிட்ஜில் வைத்தாலும் மாவு புளிக்க தான் செய்யும். இதற்கு ஒரு தீர்வு உண்டு. அரை லிட்டர் மாவுக்கு ஒரு டம்ப்ளர் தண்ணீர் என மாவில் ஊற்றி விடுங்கள். மாவை கலக்காமல் அப்படியே வைத்து விடுங்கள். ஒரு மணி நேரத்தில் தண்ணீர் மேல வந்து நிற்கும். அதனை வெளியே எடுத்து விட அதோடு சேர்ந்து புளிக்கும் தன்மையும் வந்துவிடும். இருப்பினும் இந்த மாவு இட்லிக்கு நல்லது அல்ல.