2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவிற்கு பதில் நான் நடிக்கிறேனா..? சிம்ரன் கூறிய பதில் இதுதான்..

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கதாப்பாத்திரத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார் என்று வெளியான தகவல் குறித்து நடிகை சிம்ரன் விளக்கமளித்துள்ளார்.


பி. வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டதாக பி. வாசு அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. எனினும் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

chandramukhi 2

இதனிடையே சந்திரமுகியின் 2-ம் பாகத்திலும் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் இதில் நடிப்பது குறித்து யாரும் தன்னை அணுகவில்லை என்று ஜோதிகா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கதாப்பாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை சிம்ரன் மறுத்துள்ளார்.

இந்த வதந்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்ரன் விளக்களித்துள்ளார். அவரின் பதிவில் “ இது போலி செய்தி. எனது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன். மேலும் இதுகுறித்து நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அந்தப் படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அனைவரும் தயவுசெய்து சரியான தகவல்களை பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்ரனிடமே அணுகப்பட்டது. ஆனால் ஒரு சிலக் காரணங்களால் சிம்ரனால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பிறகே ஜோதிகா அந்த கதாப்பாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

75 நாட்களுக்கு பிறகு பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் திருப்பதி

Tue Jun 2 , 2020
திருப்பதி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் அதிகம் கூடும் நாட்டின் திருப்பதி உள்ளிட்ட பல பணக்கார கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5ம் கட்டமாக நீட்டிக்கபட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 8ம் தேதி முதல் வழிபாட்டு ஸ்தலங்களை […]
திருப்பதி

You May Like