UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

டெல்லி அமைதியின்மையை கட்டுப்படுத்த, ட்ர்ம்ப் உடனான நிகழ்ச்சிகளை தவிர்த்தேன்.. அமித்ஷா பேச்சு..

டெல்லி வன்முறையின் அங்கு நிலவிய அமைதியின்மையை கட்டுப்படுத்த, ட்ர்ம்ப் உடனான நிகழ்ச்சிகளை தவிர்த்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

amitshah in loksabha

மக்களவையில் இன்று நடைபெற்ற, டெல்லி வன்முறை மீதான விவாதத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ டெல்லி வன்முறை துரதிர்ஷ்டவசமானது. இந்த வன்முறையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 25-ம் தேதி இரவு 11 மணிக்கு பிறகு டெல்லியில் எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை.

இந்த வன்முறையை அரசியலாக்கி வருகின்றனர். டெல்லியின் மொத்தம் சுமார் 1 கோடியே 70 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதில் 20 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வன்முறைகள் நடைபெற்றன. இந்த வன்முறைகள் 36 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்தன. டெல்லி காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வன்முறையை முடிவுக்கு கொண்டுவந்தனர். எனவே அவர்களை நான் பாராட்டுகிறேன்.

delhi normalcy

அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப் இந்தியா வந்த நேரத்தில், நான் தாஜ்மஹாலுக்கு சென்று பார்வையிட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நான் போகவில்லை. அடுத்த நாள் கூட, ட்ரம்ப் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சிகள் எதிலும் நான் பங்கேற்கவில்லை. மேலும், நான் வன்முறை பாதித்த இடங்களை பார்வையிட கூறி, தேசிய பாதுகாப்பு ஆசோகர் அஜித் தோவலுக்கு உத்தரவிட்டேன்.

வன்முறை நடந்த போது முழுக்க முழுக்க டெல்லி போலீசாருடன், டெல்லி நிலைமையை கண்காணித்தேன். இதுவரை சுமார் 700 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறையில் உ.பியை சேர்ந்த 300 பேருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிடால் இந்த வன்முறை பரவி இருக்காது. எனவே வன்முறைக்கு காரணமானவர்கள் யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது. எனினும் எந்த அப்பாவி மக்கள் மீதும் நடவடிக்க எடுக்கப்பட மாட்டாது என்பதை உறுதியளிக்கிறேன்.

1newsnationuser1

Next Post

“இதுபோன்ற இயக்குனர்களிடம் இரையாகி விடாதீர்கள்..” மிஷ்கின் குறித்து விஷால் அறிக்கை..

Wed Mar 11 , 2020
துப்பரிவாளன் 2 படத்தை தானே இயக்க உள்ளதாக கூறியுள்ள நடிகர் விஷால், மிஷ்கின் போன்ற் இயக்குனர்களிடம் இரையாக வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து அவர் விலகியதை அடுத்து, அப்படத்தை தற்போது விஷாலே இயக்கி நடிப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கனடா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற ஸ்க்ரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் பணத்தை […]
vishal and myskkin

You May Like