ஒரே ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்ததால், ரூ. 99,000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்.. பகீர் சம்பவம்.. ஷாக் ரிப்போர்ட்..! புகைபிடிப்பவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தான் இந்த நோய் பாதிப்பு குறைவாம்..! கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டில் எது பாதுகாப்பானது..? நிபுணர்கள் தரும் விளக்கம்..! இனிமே வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை.. வீட்டிலிருந்தே பணப்பரிமாற்றம் செய்யலாம்.. எப்படி தெரியுமா..? "பிளடி ராஸ்கல்.. திருட மாட்டேன்னு சொல்லுறதையே திருட்டு தனமா வந்து சொல்லுற.." வாட்ஸ்அப்பை வைச்சு செய்யும் நெட்டிசைன்கள்..! பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..? மர்மமான ‘ரத்த நீர் வீழ்ச்சி’.. சிவப்பு நிறத்தில் கொட்டும் தண்ணீர்.. என்ன காரணம் தெரியுமா..? தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. காதலனுடன் போன் பேச தடையாக இருந்த தந்தை..! கொடூரமாக கொலை செய்த மகள்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

தனியார் மயமாகும் 30 பசுமை காடுகள்: மத்திய அரசின் முடிவு நியாயமா?

ஊரடங்கின் போது சத்தமின்றி 30 பசுமை காடுகளை தனியாருக்கு தாரைவார்த்துள்ள மத்திய அரசு மீது, சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

download 7 1

கொரானா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கி தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக அரசு பணிகள் பெரிதும் முடங்கியுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்திலும் மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளை தனியார் திட்டங்களுக்காக அளிப்பது தொடர்பான 30 திட்டங்கள் குறித்து ஆலோசித்து அனுமதி அளித்துள்ளது. சுரங்கம் மற்றும் நெருஞ்சாலை துறை குறித்த திட்டங்களும் இதில் அடங்கியுள்ளது.

காடுகளை தனியார் மயமாக்குவது குறித்து வீடியோ கான்பரன்சிங் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால் கள ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கில் உள்ள இடு மிஷ்மி சமூகத்தின் கலாச்சார நடைமுறைகள் ஆச்சரியம் மிகுந்தவை. மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே வலுவான கலாச்சார தொடர்புள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் திபாங் பள்ளத்தாக்கில் அதிக அளவில் புலிகள் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

download 8

சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் அடிப்படையிலும் வளமான இந்த பள்ளத்தாக்கானது நாட்டின் மிகப்பெரிய எட்டலின் நீர்மின் திட்டத்துக்காக அணை அமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. பொது முடக்கத்தின்போது கடந்த மாதம் 23ம் தேதி நடந்த வீடியோ கான்பரன்சிங் மாநாட்டின்போது இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக இரண்டு அணைகள், வேறுவழியில் திருப்பும் இரண்டு சுரங்கங்கள், பென்ஸ்டாக் குழாய், சுரங்க மின்நிலையம், 50கி.மீ. தொலைவுக்கு மேல் சாலை உள்ளிட்டவை அமைக்கப்படும். இதற்காக சுமார் 8 மீட்டர் சுற்றளவு மற்றும் 1,178 ஹெக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்படும் மேலும் 2.8 லட்சம் மரங்கள் அகற்றப்படும் சூழல் உள்ளது. இந்த திட்டம் 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனகொள்கையில் இருந்து விலகி செல்வதாக உள்ளது. சத்தமின்றி திபாங் நீர்மின் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்த செய்தியானது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

images 27

இதுகுறித்து தகவல் வெளியானதும் பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு, திபாங்கில் உள்ள இடு மிஷ்மி சமூகத்தின் குறும்படங்கள், பாடல்கள், உள்ளிட்டவையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதனிடையே அறிவியலாளர்கள் பலர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எட்டலின் நீர்மின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வன ஆலோசனை குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தொடர் அழுத்தம் காரணமாக மின்துறை அமைச்சகம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வனவிலங்கு பிரிவு ஆகியவற்றிடமிருந்து வனஆலோசனை குழுவானது திட்டம் குறித்த கருத்துக்களை கேட்டுள்ளது. அசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானை ரிசர்வ் பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புகல் சுரங்கம், கர்நாடகாவில் ஷராவதி சரணாலயத்தில் புவிதொழில்நுட்ப விசாரணை மையம் அமைத்தல் உள்ளிட்ட 30 திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

images 26

இந்த திட்டங்கள் மூலமாக 15 புலிகள் ரிசர்வ் பகுதி, சரணாலயங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் மற்றும் ஏராளமான வனபகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடந்த 12ம் தேதி திபாங் கூட்டம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், ஒரு வாரத்திற்கு பின் 291 அறிவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் அடங்கிய குழுவானது ஊரடங்கின் போது தனியார் திட்டங்களுக்கு அவசர அவசரமாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் வீடியோ கான்பரன்சிங்கின் போது டிஜிட்டல் ஆவணங்களை மட்டுமே நம்பி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கள ஆய்வுகள் என்பது திட்டம் குறித்த மதிப்பீட்டின் முக்கிய அங்கமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1newsnationuser4

Next Post

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..

Tue May 26 , 2020
கொரோனா அறிகுறி மற்றும் அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்தும் வீடு வீடாக சென்று கையேடு கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதைத்தடுப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒருபடியாக கொரோனா வைரஸின் அறிகுறிகள், அது பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்ன, பரிசோதனை முறை மற்றும் மையங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரித்தல் போன்ற […]
கொரோனாவினை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை தேவை?சென்னை வருகிறது மத்தியக்குழு

You May Like