இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..!

“யாருக்குப்பா வேணும் முதலமைச்சர் பதவி..” தமிழகத்தின் ஆகச்சிறந்த தலைவர் காமராஜர் குறித்த ஸ்வாரஸ்ய தகவல்கள்..

கல்விக்கண் திறந்த கர்ம வீரர், படிக்காத மேதை, கருப்பு காந்தி, பெருந்தலைவர் என பல்வேறு பெயர்களால் போற்றப்படும் காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி, விருதுபட்டியில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை 9 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இவரின் ஆட்சி, தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காக மட்டுமே உழைத்த காமராஜரின் 117-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

kamarajar

காமராஜரை பற்றிய சில ஸ்வாரஸ்ய தகவல்கள் :

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் மூடப்பட்ட 6,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்தார் காமராஜர். இதனால் ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 5 மடங்காக உயர்ந்தது. திரும்பிய திசையெங்கும் பள்ளிகளை திறந்தார் காமராஜர். ஆனால் அப்போதும் கூட மாணாவர்கள் படிக்க வரவில்லை. காரணம் வீட்டின் வறுமை நிலையால், குழந்தைகள் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

எனவே, முதலில் அவர்களது பசியை போக்க வேண்டும் என்று நினைத்த அவர், மதிய உணவு திட்டம் என்ற திட்டத்தை கொண்டுவந்து, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தார் காமராஜர். இதுவே, பின்னாளில் எம்.ஜி.ஆர். அவர்களால் சத்துணவு திட்டம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1954-ல் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்த நிலையில், 1961-ல் 34 லட்சமாக மாறியது.

kamrajar 1

மணிமுத்தாறு, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, அமராவதி, ஆரணையாறு ஆகிய அணைகளை கட்டியதும் காமராஜர் தான். அதுமட்டுமின்றி பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்கியதால், நீர் மேலாண்மைக்கு முன்னோடியாக காமராஜர் கருதப்படுகிறார். அவரது ஆட்சியில் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாகும். கன்னியாகுமரி மாவட்டத்திலன் மலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த தொட்டிப் பாலத்தை கட்டி இருந்தார் காமராஜர்.

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் காமராஜர் காலத்தில் கொண்டுவரப்பட்டது தான். நெய்வேலி அணல்மின்நிலையம், திருச்சி பி.ஹெ.இ.எல். சேலம் உருக்காலை, கல்பாக்கம் அணல் மின் நிலையம், ரயில் பெட்டி தொழிற்சாலை என பல தொழிற்சாலைகளை உருவாக்கியதால், தமிழகம் தொழில்துறையில் 2-வது இடத்தை பிடித்தது.

பட்டங்களுக்கும், பதவிகளுக்காக மட்டுமே பாடுபடும் தலைவர்களுக்கு மத்தியில் தன்னை தேடி வந்த டாக்டர் பட்டத்தை வேண்டாம் என்று மறுத்தவர் காமராஜர். கல்வித்துறையில் சிறந்த சாதனை புரிந்ததற்காக, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒரு பல்கலைக்கழகம் முன்வந்தது. ஆனால் அவர்களிடம் பேசிய காமராஜர் “ நான் என்ன சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க.. நாட்டில் எத்தனையோ, விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த பட்டத்தை வழங்குங்கள், எனக்கு வேண்டாம்..” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

தமிழ்நாட்டில் எந்த ஊரை பற்றி பேசினாலும், அந்த ஊரில் தியாகிகளின் விபரங்களை துல்லியமாக கூறி ஆச்சர்யப்படுத்துவார்.

kamarajar 4

காமராஜரின் அமைச்சரவையில் மிகக்குறைந்த அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். அதாவது வெறும் 8 அமைச்சர்களை வைத்துக் கொண்டு தமிழகத்தில் அனைத்து சாதனைகளையும் செய்து காட்டினார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிக்குப் பணிக்கு சென்றார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். இதனால் தேசிய அளவில் காமராஜரின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. பிரதமர் பதவி தன்னை தேடி வந்த போதும், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி என 2 பிரதமர்களை உருவாக்கி கிங் மேக்கராக வலம் வந்தவர்.

சட்டத்தை காரணம் காட்டி, எந்த ஒரு மக்கள் திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. “மக்களுக்காக தான் சட்டமே தவிர, சட்டங்களுக்காக மக்கள் இல்லை” என்று அடிக்கடி கூறுவார்.

முக்கால் கை சட்டையும், வேட்டி அணிவதையே விரும்பிய காமராஜர், எளிமையான வாழ்க்கையையே விரும்பினார். அவரின் எளிமை குறித்து பிரதமர் நேரு அடிக்கடி பேசியதுண்டு. காமராஜரின் சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை என்று நேரு குறிப்பிடதுண்டு.

சட்டசபையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை முதன்முறையாக தமிழில் சமர்பித்தவர் காமராஜர் தான். மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகித்தது காமராஜர் ஆட்சிக்காலத்தில் தான்.

kamarajar photos 21

ஒருமுறை பத்திரிகையாளர் ஒருவர் காமராஜரிடம் உங்களுக்கு முதல்வர் பதவி பிடித்திருக்கிறதா என்று கேட்டார்..? அதற்கு பதிலளித்த காமராஜர் “ யாருக்குப்பா வேணும் அந்த பதவி.. ஒரே தொந்தரவு.. இந்த பதவியை வைத்து இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய முடிகிறது. அதனால தான் இந்த வேலைல இருக்கேன்” என்று கூறினார்.

காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது கும்பகோணம் அருகே ஒரு கல்லூரிக்கு வந்திருந்தார். ஏராளமான மக்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தனர். அப்போது மூதாட்டி ஒருவரும் முதலமைச்சரைப் பார்க்க வந்திருந்தார். மூதாட்டியை அழைத்த காமராஜர் அவரிடம் பேசினார். “ஐயா என்ன மாதிரி ஆதரவு இல்லாத எத்தனையோ கெழம் கட்டைங்க இப்படி சாப்பாடு கூடை தூக்கி பொழைக்கிறோம். இது நிச்சயமில்லாத வருமானமய்யா… கை காலு விழுந்துச்சுன்னா எங்கள யாரு காப்பாத்துவா..? என்று முதல்வரிடம் அந்த மூதாட்டி கூறினார்.

kamarajar 2

காரில் ஏறியவுடனேயே, இந்த மாதிரி ஆதரவில்லாதவர்களுக்கு மாசம் எவ்வளவு ஆகும்..?” என்று அதிகாரிகளிடம் கேட்டார் காமராஜர். அதற்கு அவர்கள் மாதம் 20 ரூபாய் என்று சொன்னார்கள். சென்னை வந்து சேர்ந்த மறுநாளே மாநிலம் முழுக்க உள்ள ஆதரவற்ற முதியவர்களின் புள்ளி விவரத்தை சேகரித்து, அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்று ஒரு பட்ஜெட் போடச் சொன்னார். அடுத்த 10 நாட்களில் “முதியோர் பென்சன் திட்டம்” தயாராகிவிட்டது. மாதம் தோறும் இருபது ரூபாய் அவர்களுக்கு நிரந்தரமாய் கிடைக்க வழி செய்தார் காமராஜர்.

இப்படி காமராஜரை பற்றி எண்ணற்ற விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். துணிவு, நேர்மை, எளிமை, தன்னலத்தை விட நாட்டின் நலன், மக்கள் நலன் முக்கியம் என ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் காமராஜர். இனி தமிழகத்திற்கு அவரை போன்ற தலைவர் வருவாரா என்பது சந்தேகமே.. அவர் இல்லை என்றாலும், அவர் செய்த மக்கள் பணிகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்..

1newsnationuser1

Next Post

போதை பொருள் கடத்தல் மன்னன்... ஏழைகளுக்கு கடவுள்... யார் இந்த பப்லோ...

Wed Jul 15 , 2020
பப்லோ எமிலியோ எஸ்கோபர் கவிரியா தன் வாழ்நாட்களில் குற்றங்களை மட்டுமே தொழிலாக வைத்து 400 சொகுசு பங்களா, தனியார் விமானங்கள், சொந்தமாக மிருக காட்சி சாலை என பகட்டாக வாழ்ந்த ஒரு மனிதர். பப்லோ எஸ்கோபர் கொலம்பியாவில் உள்ள ரியானெக்ரோவில் 1 டிசம்பர் 1949 அன்று ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். தனது இளைமைபருவத்திலேயே பணக்காரர் ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிறு வயது முதலே திருட ஆரம்பித்தார். […]
cf18de61704089439126dc4afff4e910

You May Like