குடிக்க பணம் கேட்டு தாயை எட்டி உதைத்த மகன்..!! அம்மி கல்லை தலையில் போட்டு கொலை செய்த தந்தை..!!

ஆரணியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை ஆத்திரத்தில் அம்மிகல்லால் தாக்கி தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஓட்டுநர் செந்தில்குமார்-உமாராணி தம்பதி. இவர்களுக்கு மதன் (19), அருண் (16) ஆகிய 2 மகன்களும் ஜீவிதா என்ற ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் மதன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர்சுற்றி வந்துள்ளதாகவும் போதைக்கு பழக்கத்துக்கும் அடிமையானதாகவும் கூறப்படுகிறது. நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்தையும், கஞ்சா புகைப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார் மதன். அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதன் குடிபோதையில் வீட்டில் தகராறு செய்து குடிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதேபோன்று கடந்த வாரம் வழக்கம்போல் தாய் உமாவிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு உமா பணம் தர மறுத்ததால், ஆக்ரோஷமடைந்த மதன் தாய் என்றும் பாராமல் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.

குடிக்க பணம் கேட்டு தாயை எட்டி உதைத்த மகன்..!! அம்மி கல்லை தலையில் போட்டு கொலை செய்த தந்தை..!!

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த மதன் வழக்கம் போல் குடிக்க பணம் கேட்டு தனது தாய் உமாராணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உமாராணி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் தாய் உமாவை தாக்கிய மதன், அவர் வைத்திருந்த 500 ரூபாயை பறித்துச் சென்றார். நடந்த சம்பவம் குறித்து உமாராணி அழுது கொண்ட தனது கணவர் செல்வகுமாரிடம் தகவலை தெரிவித்தார். உடனே வீட்டிற்கு வந்த செல்வகுமார் மதனை அழைத்து கண்டித்துள்ளார். இதனால், தந்தை செல்வகுமாருக்கும் மகன் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த மதன் தந்தை செந்தில் குமாரை தாக்க அம்மிக்களை தூக்கி வந்துள்ளார். இதனால் பதட்டம் அடைந்த செந்தில் குமார் மகனின் கையில் இருந்த அம்மிகல்லை பிடுங்கினார். பின்னர், மகன் மதனை கீழே தள்ளி மகன் தலையின் மீது அம்மி கல்லால் தாக்கினர். இதில் நிலைகுலைந்த மதன் சம்பவ இடத்திலேயே மயங்கி‌னார்.

குடிக்க பணம் கேட்டு தாயை எட்டி உதைத்த மகன்..!! அம்மி கல்லை தலையில் போட்டு கொலை செய்த தந்தை..!!

பின்னர் செந்தில்குமார் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, மயங்கி இருந்த மதன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், மதன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மேலும், மதனின் தாய் உமாரணி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய செந்தில்குமாரை கைது செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

24 மணி நேரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு....? மத்திய அரசு தகவல்...

Mon Oct 24 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,334 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

You May Like