“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

ஆர்வமுடம் பணம் கொடுத்து சிறைக்கு செல்லும் தென்கொரிய மக்கள்…! வெளியுலக வாழ்க்கைக்கு டாடா…!

நான் ஜெயிலுக்கு போறேன்:

crowd seoul
தென் கொரியா

பொதுவாக சிறையில் இருக்கும் குற்றவாளிகள் எப்போது தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என காத்திருப்பது வழக்கம். ஆனால், தென் கொரியாவிலோ பொதுமக்கள் பணம் கொடுத்து ஒருநாள் போலி சிறைவாழ்க்கையை ரசித்து அனுபவித்து வருகின்றனர்.

5c1c1ee3bde70f48d659e2eb 750 563

பொருளாதார அளவில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் தென் கொரியா, தங்கள் மக்கள் மீது சற்று அலட்சிய போக்கையே கையாண்டு வருகின்றது. அதீத வளர்ச்சியின் மீதான பேராசையில் வேலைக்கு செல்பவர்களின் வேலை நேரத்தை அதிகரித்ததும், பள்ளிகளில் கடினமான பாடங்களை கற்பித்ததும் என மன ரீதியாக மக்களை துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியுள்ளது. அதன் வெளிப்பாடாகவே இந்த போலி சிறைச்சாலைகள் பார்க்கப்படுகின்றது. வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் நாள் கணக்கில் இங்கு தங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள். தென் கொரியா முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட போலி சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு $90 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

கட்டுப்பாடுகளும் வரவேற்பும்:

0 MAIN South Koreans are sending themselves to prison


போலி சிறைச்சாலைக்கு உள்ளே செல்ல விரும்புபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. செல்ஃபோன், கைகடிகாரம் கொண்டு செல்லக்கூடாது, வெளியில் இருந்து உணவுகளை கொண்டு வரக்கூடாது, யாருடனும் பேசக்கூடாது போன்ற வில்லத்தனமான விதிகள் பலரையும் கவர்ந்திருப்பது தான் ஆச்சர்யத்தின் உச்சம். சிறைக்கு உள்ளே செல்பவர்களுக்கு ஒரு யோகா மேட், டீ கப், பேனா, புத்தகம், ஜெயிலில் அணிந்துகொள்ள நீல நிற சீருடையும் கொடுக்கப்படுகின்றது. இந்த போலி சிறைச்சாலைக்கு தென் கொரிய மக்கள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்து வருகின்றனர்.

நாள் கணக்கில் தங்கும் மக்கள்:

b3591c6d 1854 4ef4 bcde 4fb6caa6a49c

54 சதுர அடியில் ஒவ்வொரு சிறையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனுள் ஒரு சிறிய கழிப்பறை மட்டுமே இருக்கும். காலை உணவாக அரிசியும் , மதியம் சக்கரவள்ளி கிழங்கும், இரவு வாழைப்பழ மில்க்‌ஷேக்கும் வழங்கப்படுகின்றது. காலையில் சீக்கிரம் எழுந்து யோகா பயிற்சிக்கு கட்டாயம் செல்ல வேண்டும். தங்கள் மனதில் எழும் எண்ணங்களையும் புத்தகங்களில் எழுத வேண்டும். போலி சிறையில் இருந்து வெளி வரும் பெரும்பாலானோர் தங்களின் மன அழுத்தம் முன்பை விட குறைந்து மன நிம்மதி கிடைத்துள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

72801056 59a5 4d6f 99ac 4e1df65b3722

வேலை, குடும்பம், எதிர்காலம் என எந்த கவலையும் இன்றி தங்களின் மனதோடு மட்டும் நேரத்தை செலவழிப்பது ஆத்ம திருப்தியை கொடுத்துள்ளதாகவும், அடிக்கடி இந்த போலி சிறைச்சாலைக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையினுள் கடிகாரம் இல்லை என்பதால் சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் வரை அவர்கள் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம். வெளிவரும் சிறைவாசிகள் அவர்கள் அங்கே தங்கியிருந்த நாட்களை கேட்டு அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். நேரம் செல்வதே தெரியவில்லை எனவும் அவர்கள் வியந்து கூறியுள்ளனர்.

c3f4d691 02c1 4f86 b4f4 add9ed36e7d1

தொழில்நுட்பத்தின் சறுக்கல் ஆரம்பம்: பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் , சொகுசு வாழ்க்கை என இன்றைய காலகட்டம் வேகமாக சென்று கொண்டிருந்தாலும், மக்களுக்கு நாளடைவில் அதன் மீது வெறுப்பே அதிகரித்துள்ளது என்பதற்கு இந்த போலி சிறைச்சாலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதை நோக்கி நாம் இவ்வளவு வேகமாக சுழன்றுகொண்டிருக்கின்றோம் என்ற கேள்விக்கு விடை தேட ஆரம்பித்தால் முடிவு, நம் மீதே நமக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது.

south korea fake jail 1

வெளியுலக வாழ்க்கையை விட தனிமையே மகிழ்ச்சி அளிக்கிறது என்ற தென் கொரிய மக்களின் இந்த மனநிலை மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவ வாய்ப்புள்ளது. ஏற்கனவே தனிமையாக வீட்டில் வாழ்வதையே அந்நாட்டு மக்கள் பெரிதும் விரும்புவதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த போலி சிறைச்சாலைகள் உலகிற்கு ஏதோ ஒன்றை அழுத்தமாக சொல்ல முயல்கின்றன. அது என்ன என்பதே விடை தெரியா வினா…

Newsnation_Admin

Next Post

திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்…! ஏழுமலையான் கோவிலில் மகா ரத தேரோட்டம் கோலாகலம்…!

Mon Oct 7 , 2019
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் இன்று காலை மகாரத தேரில் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரத உற்சவத்தின் போது பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற்றன.பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு தங்க குதிரையில் கல்கி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி […]
tirupathi maharatha therottam

You May Like