
சென்னை : தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்திற்கு அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா கரையோரப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைப்பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.