நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் அனுப்பட்ட இரண்டு விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.

டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் என்ற இரண்டு வீரர்களும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், சனிக்கிழமை அன்று விண்வெளிக்கு கிளம்பினர்.
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட இவர்களை ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்த ரஷ்யா மற்றும் அமெர்க்காவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வரவேற்றனர். காப்ஸ்யூல் வடிவில் வடிவமைப்பட்ட இந்த பால்கன்-9 ராக்கெட் 19 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் போன்ற திறமை வாய்ந்த பல தனியார் நிறுவனங்களுக்கும் நாசா உதவ முன்வந்திருக்கிறது. இந்த சாதனை பயணத்தின் மூலம் இனி நாசா ரஷ்யாவை சார்ந்திருக்கும் வாய்ப்பை குறைக்கும் என நம்பப்படுகிறது.