மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

ஒரே நாளில் 738 பேர் பலி.. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்..

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 738 பேர் உயிரிழந்துள்ளதால், அந்நாட்டின் பலி எண்ணிக்கை 3,434-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் சீனாவை ஸ்பெயின் மிஞ்சியுள்ளது.

AP 20061587393230 1

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் உஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து எப்படி மீள்வது என்று பல முன்னேறிய, வல்லரசு நாடுகளே திணறி வரும் நிலையில், இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால் கொரோனா நோய் பரவும் மையமாக ஐரோப்பாவை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை அதிகபட்சமாக இத்தாலியில் 6,820 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஸ்பெயின் நாட்டிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 738 உயிரிழந்ததால், அந்நாட்டின் பலி எண்ணிக்கை 3,434-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 5,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,610-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் 14-ம் தேதி அங்கு அமல்படுத்தப்பட்ட லாக் டவுன் வரும் ஏப்ரல் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாரத்தில் மிகமோசமான பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனினும் நகரங்கள் முடக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை விரைவில் சரியாகும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

corona virus n

இதனிடையே ஸ்பெயினில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்குள்ள மேரிட் நகரில் ஐஸ் பேலஸ் என்ற வணிக வளாகத்தின் ஒரு பகுதி தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் கபாலி மோகன் தூக்கிட்டு தற்கொலை...நிதி நெருக்கடியா என விசாரணை...

Thu Mar 26 , 2020
பெங்களூரு, பீனியா பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் அறை எடுத்து திரைப்பட தயாரிப்பாளர் கபாலி மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவர் மோகன் வாக்வாடி என்கிற கபாலி மோகன். இவர் தொழில் அதிபராகவும், நிதி நிறுவனமும் நடத்தி வந்துள்ளார். மறைந்த கபாலி மோகன் கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரு சதாசிவநகரில் […]
Kannada filmmaker Kapali Mohan commits suicide

You May Like