விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள்..? வெளியான புதிய அறிவிப்பு..!! மாணவர்கள் அதிர்ச்சி

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கல்வித்துறையில் அனுமதி பெற்று, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12ஆம் தேதி வரையும், அரசுப் பள்ளிகளின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 9ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த எந்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை. இதனால், காலாண்டு தேர்வு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைகளை, பள்ளிகளே நிர்ணயித்துள்ளன.

விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள்..? வெளியான புதிய அறிவிப்பு..!! மாணவர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், தனியார் பள்ளிகள் பலவற்றில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த சில பள்ளிகள், தாங்களும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்விக்துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். அதற்கு, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கல்வித்துறையில் அனுமதி பெற்று, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். மற்ற வகுப்புகளுக்கு பெற்றோர் ஒப்புதல் இன்றி வகுப்புகளை நடத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

Chella

Next Post

பாலியல் பலாத்காரம்..!! ’நிர்வாண’ நிலையில் 17 வயது சிறுமியின் சடலம்..!! அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரம்..!!

Tue Oct 4 , 2022
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியாவில் உள்ள ஒரு வயல் வெளியில் 17 வயது சிறுமியின் உடல் ஒன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலைக் கைப்பற்றி, காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ”தனது மகள் […]
பாலியல் பலாத்காரம்..!! ’நிர்வாண’ நிலையில் 17 வயது சிறுமியின் சடலம்..!! அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரம்..!!

You May Like