
வடசென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், ஊரடங்கு மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கையினை எடுக்கவும் அதிரடிபடையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் ஆட்டிப்படைத்துவருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது வரை 67 ஆயிரத்து 468 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் தீவிரம் காட்டும் இந்நோயின் பரவலை தடுக்க, ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் தேவையின்றி பொது வெளியில் சுற்றித்திரிகின்றனர்.

இந்த நிலையில், வடசென்னையில் ஊரடங்கினை மீறுவோர் மீது நடவடிக்கையை எடுக்க போலீசார் அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். அங்கு இருசக்கர வாகனங்களில் மற்றும் தெருக்களில் தேவையின்றி நோய்த்தொற்று பரப்பும் வகையில் சுற்றிதிரிபவர்களை அடக்குவதற்காக, இன்று முதல் வட சென்னை துணை ஆணையர் சுப்புலெட்சுமி தலைமையில் 20 க்கும் மேற்பட்ட அதிவிரைவு படை வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் வடசென்னையில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஆட்கள் நடமாட்டங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..