fbpx

முருகனை வழிபட்டு இந்த பரிகாரம் செய்தால் திருமண தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும்.!?

பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் திருமணம் இன்னும் நடக்கவில்லை என்ற கவலை யாருக்கும் இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வந்து விட்டாலே ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் படிப்பு, வேலை, பொருளாதாரம் என அனைத்திலும் சிறந்ததாக இருந்தாலும் பலருக்கும் திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிர்பார்ப்பு என்பது அதிகமாகி விட்டது. திருமண வயதில் படிப்பு, வேலை என காலத்தை தள்ளிவிட்டு முப்பது வயதிற்கு பின்பாக திருமணமாகவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இந்த முருகன் கோயில் பரிகாரம் செய்வதன் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும்.

இதன்படி செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது ஒரு முருகன் கோயிலுக்கு சென்று கோயிலின் வடமேற்கு மூலையில் இரவு முழுவதும் தங்கி இருந்து மறுநாள் காலையில் நீராடி விநாயகருக்கு அருகம்புல் மாலை போட்டு வேண்டிக்கொள்ளவும். பின்பு முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சன்னதிக்கு சென்று அபிஷேகம் செய்து 108 நெய் விளக்குகள் போட்டு முருகனை மனதார வேண்டிக் கொள்ளவும்.

அடுத்த முறை முருகன் கோயிலுக்கு வரும்போது தம்பதிகளாக வரவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து வந்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பிறகு இதே போல் கணவன், மனைவியாக சேர்ந்து கோவிலுக்கு சென்று இரவு தங்கி வேண்டி கொள்ள வேண்டும்.

English summary: astrology ways to get married soon

Read more : ஒரே வாரத்தில் தைராய்டு பிரச்சினை குணமாக, இந்த பாட்டி வைத்திய முறையை செய்து பாருங்கள்.!?

Rupa

Next Post

EB Bill : அதிரடி...! மின்சார விதிகள் 2020-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல்...! முழு விவரம் இதோ..

Thu Feb 29 , 2024
மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் – 2020 இல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் – 2020 இல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தங்களை வெளியிட்ட மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், இந்தத் திருத்தங்கள் புதிய மின் இணைப்புகளைப் பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் குறைக்கும் என்றார். மேற்கூரை சூரிய சக்தி […]

You May Like