fbpx

ரோகித் ஷர்மா குறித்து மட்டும் ஏன் யாருமே பேசுவதில்லை? கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கவாஸ்கர்..!

விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப ஒருநாள் தொடர் வாய்ப்பாக அமையும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அக்.16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இந்திய அணி பல்வேறு வீரர்களை டி20 உலகக் கோப்பைக்காக தயார்படுத்தி வருகிறது. இந்நிலையில், அண்மை காலமாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் எடுக்க முடியாமல் தவித்து வரும் விராட் கோலிக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காமல் கூட இருக்கலாம் என முன்னாள் வீரர்கள் சூசகமாக கூறி வருகின்றனர். இருப்பினும், விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ள கேப்டன் ரோகித் சர்மா, ஒரு வீரர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடும் போது ஒரு தொடரை வைத்தோ, இல்லை ஒரு சில மாதங்களை வைத்தோ முடிவு எடுக்க கூடாது என்று கூறி விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார்.

என்னக்கு பிடிக்காதது தோல்வி அடைவது - விராட் கோலி! - Kalakkal Cinema

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”ரோகித் சர்மா ரன் அடிக்காதபோது அதைப் பற்றி யாருமே பேசுவதில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? இங்கே எல்லா வீரர்களும் ஒன்றுதான். ஃபார்ம் என்பது தற்காலிகமானது, ஆனால் தரம், திறமை என்பது நிரந்தரமானது. நம்மிடம் நல்ல தேர்வுக் குழு உள்ளது. வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க போதுமான நேரம் இருப்பதாக நான் நினைக்கிறேன். வீரரின் ஃபார்மை மனதில் வைத்து அணியை தேர்வு செய்ய வேண்டும்.

image

ஒரு நாள் போட்டித் தொடர் சரியான நேரத்தில் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது, விராட் கோலி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துணைபுரியும். டெஸ்ட் கிரிக்கெட்டைப் போலவே, ஒருநாள் ஆட்டத்திலும் செட்டில் ஆக போதுமான நேரம் கிடைக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் நிலைமைக்கு ஏற்ப விளையாட முடியும். எனவே, விராட் கோலி தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்ப இந்த ஒருநாள் தொடர் ஒரு வாய்ப்பாக அமையும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..

Tue Jul 12 , 2022
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ […]

You May Like