ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..!

அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிப்பதை அதிமுக அரசு நியாப்படுத்துவது பொறுப்பற்ற பொல்லாச் செயல் – ஸ்டாலின்

அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிப்பதை அதிமுக அரசு நியாப்படுத்துவது, பொறுப்பற்ற பொல்லாச் செயல் என்று மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மின்கட்டணம்

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “ மின்கட்டண உயர்வுப் பிரச்சினையை இன்னமும் முதலமைச்சரோ அல்லது மின் துறை அமைச்சரோ புரிந்து கொள்ளாமல் இருப்பது ஊரடங்கை விடக் கொடுமை, நுகர்வோர்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர் என்ற வாதத்தைக் கூறி அமைச்சரும், அரசும் மக்களை கேவலப்படுகின்றனர்.

மின்சார சட்ட சிதிகளை உயர்நீதிமன்றத்தில் காட்டி அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிப்பதை அதிமுக அரசு நியாப்படுத்துவது வேதனையாக இருக்கிறது. அரசு காட்டும் மின்சாரச் சட்டவிதிகளின் படியே கொரோனா பேரிடரை ஒரு சிறப்பு தேர்வாகக் கருதி, மின் கட்டணத்தை குறைக்கலாம். ஆனால் மனம் தான் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் தடையாக இருக்கிறது.

முந்தைய மாதத்தில் மின் நுகர்வோர் செலுத்திய மின்கட்டணத்திற்குரிய யூனிட்களை கழித்து, மின் கட்டணத்தை கணக்கிட வேண்டும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணத்திற்குரிய மானியம் அளிக்கவோ அல்லது நீண்டகாலத் தவணை முறையில், செலுத்தவோ ஏற்பாடு செய்ய வேண்டும்.

31.07.2020 வரையிலான ஊரடங்கு காலத்திற்கு கேரள மாநில அரசு அறிவித்துள்ளது போல், வீட்டுப் பயன்பாட்டிற்கான 70% மின் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அறிவித்திட வேண்டும். முதலமைச்சருக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், இந்த சலுகைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

“ஒரே நாளில் கொரோனா குணமாகாது.. ” கோவை மூலிகை மைசூர்பா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..

Wed Jul 8 , 2020
ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் என்று மூலிகை மைசூர்பா விற்பனை செய்து வந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் நெல்லை லாலா ஸ்வீட் என்ற கடை இயங்கி வருகிறது. அக்கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம் தான் தற்போது மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று நோட்டீஸ் விநியோகித்து வந்தார். 19 வகையான மூலிகைகளை பயன்படுத்தி இந்த மூலிகை மைசூர்பாவை […]
மூலிகை மைசூர்பா

You May Like