2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..!

“கிராமங்களில் கொரோனா அலை.. சமூகப்பரவல் இல்லை என காலத்தை வீணடிக்கும் அதிமுக விஞ்ஞானிகள்..” – ஸ்டாலின் விமர்சனம்..

கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும், சமூகப்பரவல் இல்லை என்று அதிமுக ‘விஞ்ஞானிகள்’ காலத்தை வீணடிக்கின்றனர் என்று மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கிராமங்களில்

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ சமூகப் பரவல் இல்லை என ‘விஞ்ஞானிகள்’ அமைச்சரும், முதலமைச்சருமே பேட்டியளித்து காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரோனா அலை கிராமங்களில் வீச தொடங்கியுள்ளது. தொற்று எண்ணிக்கையில் 50% சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் நிகழ்கிறது.

சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் ஜூன் 1 நிலவரப்படி 7,725 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், 46 பேர் உயிரிழந்தனர். ஆனால் ஜூலை 2 நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து 25,794 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையோ 7 மடங்கு உயர்ந்து 357-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலின் மாவட்ட வாரியான தகவல்களைக் கோரி ஆட்சியர்களிடம் கழக மாவட்டசெயலாளர்கள் மனு அளித்துள்ளனர். கிராமங்களைத் தயார்ப்படுத்தாவிடில் பேராபத்து ஆகிவிடும் என எச்சரிக்கிறேன். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு, படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள், பரிசோதனை அதிகரிப்பு, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு கால தாமதமில்லாமல் செயல்படுத்த வேஎண்டும், சென்னையில் குழுக்களை அமைத்து, பனிப்போரை உண்டாக்கி தடுமாறி நிற்பது போன்ற நிலை, மற்ற மாவட்டங்களில் உண்டானால் மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்திவிடும்.

stalin cor tw

நோய்த்தொற்று பரவல் அதுவாகவே தணியட்டும், அப்போது நம்மால் தான் தணிந்தது, குறைந்தது என்று புகுந்து பெயர் எடுத்துக்கொள்ளலாம் என நினைத்து, எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தால், ஆபத்தான கட்டத்தை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. இதை நான் விடுக்கும் எச்சரிக்கையாக கொண்டு மக்களை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

1 டன் தங்கம் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஓட்டல்..தட்டு முதல் கழிவறை வரை தங்கம்

Sun Jul 5 , 2020
வியட்நாமில் புதியதாக திறக்கப்பட்டு உள்ள ஓட்டல் ஒன்று 1 டன் தங்கம் கொண்டு முழுவதுமாக முலாம் பூசப்பட்டு ஜொலிஜொலிப்பதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்க்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தியதையடுத்து தலைநகர் ஹனோய் நகரில் கட்டப்பட்டுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் புதியதாக திறக்கப்பட்டது. இந்த, டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், ஹோவா குழுமத்திற்கு சொந்தமானது. இந்த ஹோட்டல், அமெரிக்காவை தளமாகக் கொண்ட விந்தாம் ஹோட்டல் அண்ட் […]
Pic 1593913718151

You May Like