“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

எம்ஜிஆர், ஜெயலிலதாவுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டதா அதிமுக அரசு..? ஸ்டாலின் கேள்வி..

எம்ஜிஆர், ஜெயலிலதாவுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டதா அதிமுக அரசு என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின்

இதுதொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மத்திய பாஜக அரசு பல்வேறு உள்நோக்கங்களோடு திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை, மாநில உரிமைகளுக்கும் – சமூக நீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிரானது. இளைஞர்களின் எதிர்காலத்தையும் இருளில் தள்ளும்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து கண்டனத்தை உறுதியாக பதிவு செய்துள்ள நிலையில், அதிமுக அரசு தனது டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு பயந்து, அமைதி காப்பது தமிழகத்தின் நூற்றாண்டு கால கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாகும்.

தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை என பேரறிஞர் அண்ணா ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இருமொழிக் கொள்கை தீர்மானத்தின் பயனாக, தமிழ் மொழி வளர்ச்சிப் பெற்றதுடன், ஆங்கிலம் வாயிலாக தமிழக மாணவர்கள் உலகளவில் பெரும் பொறுப்புகளை வகிக்கிறார்கள்.

வட இந்திய மாணவர்களை விட, தமிழக மாணவர்கள் பெற்றுள்ள இந்த வளர்ச்சியின் உயரத்தை சிதைத்திடும் நோக்கத்தில், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன..?

எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அம்மையாரும் கூட தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு இடம் தராமல், இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டதா இன்றைய அதிமுக அரசு..? சமூகநீதி-பன்முகத்தன்மைக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை அதிமுக அரசு எதிர்க்காதது ஏன்?

தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுக்கத் திட்டமா” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

#BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 5,879 பேருக்கு கொரோனா உறுதி.. எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்..?

Sat Aug 1 , 2020
தமிழகத்தில் இன்று புதிதாக 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், சராசரியாக 6,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 2 நாட்களாக 6000-க்கும் குறைவாக தொற்று கண்டறியப்பட்டது. அந்த வகையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் 6,000-க்கும் குறைவாகவே பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்றைய கொரோனா […]
தமிழகத்தில்

You May Like