எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்.. மாநில அரசுகள் கோரிக்கை.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது..?

நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில அரசுகள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து எந்த இறுதி முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

india lockdown

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனாலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் 4000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், 114 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஏப்ரல் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது அதன்பிறகும் நீடிக்குமா என்பதே அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி..

இந்நிலையில் நாட்டின் பல மாநில அரசுகளும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், அதனை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

central govt

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நாட்டின் நலன் கருதி உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான உத்தரவு உரிய நேரத்தில் பிறப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதனிடையே ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்காமல், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மட்டும் நீட்டிக்க மத்திய அரசு பரீசிலித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நாடு முழுவதும் 20 இடங்களை நோய் பரவும் மையம் என மத்திய சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளதாகவும், கொரோனா அதிகமாக பரவும் சாத்திக்கூறு கொண்ட மேலும் 20 இடங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

coronavirus

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது என்றும், மற்ற இடங்களில் தளர்த்தப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, அங்கு அதிக கூட்டம் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து சேவையும் ஏப்ரல் 30-ம் தேதி வரை இயங்காது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

1newsnationuser1

Next Post

லேட்டா கொடுத்தாலும் தாராளமாக நிதியுதவி அளித்த அஜித்.. கொரோனா நிவாரணமாக எவ்வளவு வழங்கியுள்ளார் தெரியுமா..?

Tue Apr 7 , 2020
நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சினிமா, டிவி சீரியல், விளம்பரம் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நலிவடைந்த சினிமா தொழிலாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் […]
அஜித்

You May Like