’’மாநிலக் கட்சிகளை பா.ஜ.க. அழிக்கின்றது’’ .. முன்னாள் முதல்வர் குமாரசாமி காட்டம்…

மாநில கட்சிகளைபா.ஜ. அழிக்கின்றது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களை பாஜகவில் இணைப்பதற்காக, அவர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக மூன்று பேரை தெலுங்கானா போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி கூறுகையில், “முனுகோடு இடைத்தேர்தலுக்கு முன்பாக, கேசிஆர் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையையும், தெலங்கானா அரசைக் கவிழ்க்கும் பணியையும் பாஜக செய்து வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.

ஹெச்.டி.குமாரசாமி மேலும் கூறுகையில், “தெலங்கானாவில் நடந்துள்ள இந்த விவகாரம் எனக்கு வியப்பு அளிக்கவில்லை. கேசிஆர் தலைமையிலான தெலங்கானா அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது. மாநிலக் கட்சிகள், எதிர்கட்சிகளை இல்லாமல் ஆக்கும் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர். கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தப் பணியினைச் செய்து வெற்றியும் அடைந்துள்ளனர்.

தெலங்கானாவில் ஆட்சியைக் கவிழ்க்க சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை பாஜக பயன்படுத்துகிறது. பிரதமர் மோடி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். தெலங்கானாவில் எம்எல்ஏகளை விலைக்கு வாங்க எந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது என்று மோடி தெளிவு படுத்த வேண்டும்” என்று குமாரசாமி தெரிவித்தார்.

Next Post

’தாராள பிரபு ’ ஹீரோவுக்கு டும்.. டும்..!!

Thu Oct 27 , 2022
’தாராள பிரபு ’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண் நாளை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் , திருமண அறிவிப்புக்கு பின்னர் வாழ்த்தி உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றி , உங்கள் அன்பு இன்னும் தேவை என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் ’ திருமணத்திற்கு பின்னரும் நீங்கள் ரொமாண்டிக் படங்களில் நடிப்பீர்களா? எனும் கேள்விக்கு […]

You May Like