பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

“நமக்கு ஒன்னும் வராது என்று கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்க வேண்டாம்..” கொரோனா குறித்த வீடியோவில் கமல் பேச்சு..

நமக்கு ஒன்னும் வராது என்று கண்மூடித்தனமான நம்பிக்கையில், அசட்டு தைரியத்தில் இருக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கொரோனா குறித்த வீடியோவில் பேசியுள்ளார்.

kamal n

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 2,76,518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 91,954 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,417-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுவரை 270-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், 5 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே எடுத்து வருகின்றனர்.

1

இதனிடையே அண்மையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாளை காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேறமால் தேசிய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் “ கொரோனா பாதிப்பு 4வது, 5 வது வாரங்களில் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதை பலநாடுகளில் பார்த்துள்ளோம். வைரஸ் தொற்று தெரியாத சிலர் வெளியே செல்வதால், 5 பேரிடம் இருந்து 25 பேருக்கு பரவும். அது மேலும் 100 பேருக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி சமூக விலகல். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு செல்ல வேண்டாம். இப்போது தமிழகம் 4-வது வாரத்தில் இருக்கிறது.

இதன் மூலம் வைரஸ் பரவுதலை தடுக்க முடியும். நமக்கு ஒன்னும் வராது என்று கண்மூடித்தனமான நம்பிக்கையாலோ, அசட்டு தைரியத்தாலோ இந்த நோய் பரவ நாம் காரணமாக கூடாது. முன்னெச்சரிக்கை தான் முக்கியமானது. இயந்திரமா ஓடிட்டுருந்த வாழ்க்கையில், காலத்தின் கட்டாயத்தால் ஏற்பட்ட ஒரு சின்ன இடைவெளி தான். வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருங்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

128 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்டுள்ள திருப்பதி கோவில்.. இப்போது கொரோனா பீதி.. அப்போது ஏன் மூடப்பட்டது தெரியுமா..?

Sat Mar 21 , 2020
தற்போது கொரோனா பீதி காரணமாக திருப்பதி மூடப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்பு 1892-ம் ஆண்டில் 2 நாட்கள் கோயில் மூடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பீதி காரணமாக, திருப்பதி ஏழுமலையான கோவில் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், தினசரி பூஜைகள் நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது. தேவஸ்தான் போர்டின் நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 50 துணைக் கோயில்களும் மூடப்படும் என்று […]
திருப்பதி

You May Like