ரூ.10,000 கோடி கடந்தது சாதனை…! மத்திய எஃகு ஆணையம் விளக்கம்…!

அரசு மின்னணு சந்தை இணைய தளம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.10,000 கோடிக்கு மேல் கொள்முதல் செய்துள்ள முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இந்திய எஃகு ஆணையம் திகழ்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.2.7 கோடி என்ற சிறிய அளவில் கொள்முதலை தொடங்கிய இந்திய எஃகு ஆணையம் இந்த ஆண்டு கொள்முதல் மதிப்பை ரூ.10,000 கோடியாக கடந்தது.

முந்தைய நிதியாண்டில் ரூ.4,614 கோடி அளவிற்கு கொள்முதல் செய்து அரசு மின்னணு சந்தை இணைய தளத்தின் மூலம் அந்த ஆண்டு அதிகளவு கொள்முதல் செய்த மத்திய பொதுத்துறை நிறுவனமாக இந்திய எஃகு ஆணையம் இருந்தது. நடப்பு நிதியாண்டில் முந்தைய ஆண்டின் சாதனையை கடந்து இதுவரை ரூ. 5250 கோடி அளவிற்கு கொள்முதல் செய்துள்ளது.

Vignesh

Next Post

புதுச்சேரியில் 16 நாட்கள் பொதுவிடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Fri Oct 28 , 2022
புதுச்சேரியில் 2023ஆம் ஆண்டில் 16 நாட்கள் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் 2023ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 16 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு […]

You May Like