அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்..

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

தடை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் “ தமிழ்நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பொது ஊரடங்கு வரும் நவம்பர் 30 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு புதிய தளர்வுகளுடன் பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

வரும் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது 9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பள்ளி /கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் நவம்பர் 16 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பள்ளிகள்

பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துச் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் மொத்த வியாபார பழக்கடைகள் , நவ. 2 முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக நவ. 16 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அவை அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்பட வேண்டும்.

சின்னதிரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து திரையரங்குகளைத் திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளைப் பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றைத் திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்துத் திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி நவம்பர் 10 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது

தியேட்டர்கள்

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவம்பர் 16 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவம்பர்.10 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வரும் 1-ம் தேதி முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன

113321808 gymgroup 1

தமிழகம் முழுவதும் உள்ள நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும்.

வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழகத்திற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போதுள்ள இ- பதிவு முறையே தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு..

Sun Nov 1 , 2020
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த மே 7-ம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டன. உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வாங்கியது. அந்த வகையில் கடந்த மே […]
டாஸ்மாக்

You May Like