டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்றிரவு 9 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாநிலத்தில் இருந்து 16 கி.மீ தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.6 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.
பல நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஒரு மாதமாகவே டெல்லி தொடர் நிலநடுக்கங்களை சந்தித்து வருகிறது.
கடந்த 15-ம் தேதி அங்கு 2.2 என்ற அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. தேசிய நிலநடுக்கம் ஆய்வு மையத்தின் படி, கடந்த ஏப்ரல் 12-ம் தேதியில் இருந்து இது டெல்லியில் ஏற்பட்ட 4-வது நிலநடுக்கம் ஆகும்.

இதேபோல் வடகிழக்கு டெல்லியில் உள்ள வாஸிர்பூர் பகுதிய்ல் கடந்த 10-ம் தேதி மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு மே 12,13 ஆகிய தேதிகளில் அதே பகுதியில், முறையே 3.5, 2.7 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.