வரும் 17-ம் தேதி வரை பலத்தகாற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..

வரும் 17-ம் தேதி வரை பலத்தக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்றூ வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 15,16, 17 ஆகிய தேதிகளில் புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று, கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகள்‌, ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல்‌, மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. நாளை, கர்நாடகா கடலோரப்பகுதிகள்‌, ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

வரும் 15, 16 ஆகிய தேதிகளில் கர்நாடகா கடலோரப்பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதி, மத்திய அரபிக்கடல் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. வரும் 17-ம் தேதி, மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில் மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

“மோடிக்கிட்ட இப்படி பேசிப் பாருங்களேன்..” எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த ஆர்.எஸ். பாரதி..

Thu Jul 14 , 2022
திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர்.எஸ்.பாரதி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய ‘தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்’ எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார். பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா.. நடக்காது ஸ்டாலின் அவர்களே” என்று மைக்கைக் கடித்தபடி பேசியிருக்கிறார். அவர்களின் கட்சியில் வான(க)ரக் கூட்டம், ராயப்பேட்டை ரவுடிகள் கலவரம் […]

You May Like